கரூர் மாவட்டத்தின் வரலாறும் சிறப்பும்

கரூர் மாவட்டத்தின் வரலாறும் சிறப்பும்

      கருவூர் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட கரூர் நீங்காத பழமையும், வரலாற்று சிறப்பும், வணிகச் சிறப்பும், ஆன்மீக பெருமையும் கொண்டது.

      கரூரை பற்றி பல புலவர்கள் பாடியுள்ளனர். கரூர் என்ற பெயர் கருவூரார்  எனும் புலவர் பெயரிலிருந்து வந்தது. அவர் தெய்வீக இசை திருவிழாவை பற்றி பாடிய 9 புலவர்களில் ஒருவர். அவர் ராஜ ராஜ சோழன் காலத்தில் வாழ்ந்தார். மேலும் கரூர் ஆன்பொருநை நதி என்று அழைக்கப்படும் அமராவதி ஆற்றின் கரை ஓரத்தில் அமைந்துள்ளது.

      2000 ஆண்டு பழமை மிக்க கரூர் பல அரசுகளின் கீழ் ஆளப்பட்டுள்ளது. குறிப்பாக சேர, சோழ, பாண்டிய, நாயக்கர்கள், திப்பு சுல்தான், ஆங்கிலேயர்கள்  போன்றோர் முக்கியமான அரசுகள்.

      சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. மேலும் சேரர்கள் இருந்ததற்கான கல்வெட்டுகள், நாணயவியல், தொல்பொருள் மற்றும் இலக்கிய சான்றுகள் நிரூபிக்கின்றன.

      அதில் முக்கியமான பாய்கள், மண் பானைகள், செங்கற்கள், மண் பொம்மைகள், ரோமன் நாணயங்கள், சேர நாணயங்கள், பல்லவ நாணயங்கள் இன்னும் நிறைய கிடைக்கப்பெற்றன.

      கரூர் அருகே உள்ள ஆறு நாட்டார் மலையில் கரூரை ஆண்ட  சேர மன்னர்களின் அடங்கிய கல்வெட்டுகள் இருக்கின்றன. பின் கரூர் சோழர்களின் முக்கிய நகரமாகவும் இருந்து உள்ளது.

     ஆங்கிலேயர் மைசூர் போரின் போது இறந்தவர்களுக்காக ராயனூர் பகுதியில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கரூர் ஆங்கிலேயர் வசம் சென்றது. முதலில் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் பிறகு திருச்சி மாவட்டத்திலும் இருந்தது. பின் செப்டம்பர் 30, 1995 அன்று, திருச்சி மாவட்டத்திலிருந்து கரூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. கரூர் தனது (25) கால் நூற்றாண்டை நோக்கி  அடி எடுத்து வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!