T – What letter T says about you – in Tamil

    நன்றாக செயல்படுபவர், உணர்ச்சி வசப்பட்டவர் மற்றும் ஒய்வின்றி உழைப்பவர். நீதி மற்றும் கடவுள் நம்பிக்கை உடையவர். புதுமையான சிந்தனைகள் கொண்டவர்கள். அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு வருத்தப்படுபவர், எளிதில் பிறரின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்து விடுபவர். தங்களுடைய வார்த்தையிலும் ஆசையிலும் செயலிலும் சுய கட்டுப்பாடு தேவைப்படும் நபராக விளங்குபவர்.

    சண்டையையும் கவலையையும் சமாதானப்படுத்தி அமைதியை உருவாக்குவதில் திறமை வாய்ந்தவர். அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பையே மிகவும் நம்புபவர். உங்களுடைய அப்பாவி தனமும் உதவும் மனப்பான்மையும் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை பிரபலமானவர்களாக காட்டும். நீங்கள் எதிர்பார்க்கும்படி பிறர் நடந்துக்கொள்ளவில்லை என்றால் அதனால் மிகவும் வருத்தப்படக்கூடியவர்கள்.

     இவர்கள் தங்களுக்கு மிக நெருக்கமான நபர்களிடம் மட்டுமே தங்களைப் பற்றிய இரகசியங்களை பகிர்ந்துக்கொள்வார்கள். ஒருவரிடம் இருந்து ஒரு விசயத்தை மறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவரால் அந்த விசயத்தை தெரிந்துக்கொள்ள முடியாது. இவர்கள் செய்யும் வேலையில் மிகுந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் உடையவர். மனரீதியாக பல கேள்விகளை தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்பவர்கள். வாழ்க்கையிலும் வேலையிலும் சமநிலையை கொண்டு வர மிகுந்த கவனம் செலுத்துபவர். அனைத்து சாதனைகளிலும் முன்னால் வந்து நிற்காமல் பின்னால் நின்று பெருமைப்பட்டுக்கொள்பவர். தன்னை சுற்றியுள்ள அனைவரிடமும் உணர்வு பூர்வமாக நடந்துக்கொள்பவர்கள்.

    காதலைப் பற்றி பெரிய கனவுகளை உடையவர்கள் ஆனால் அதனை அடைய மிகவும் காயப்படுபவர்கள். பிறரின் அறிவுரைகளை ஏற்க மறுப்பார்கள் பெரும்பாலான நேரங்களில் அறிவுரை வழங்குபவர்களிடம் மோசமான நிகழ்வுகளை ஏற்படுத்தி விடுவார்கள். அனைத்து விசயங்களையும் ரசிப்பவர். இதமான இசை, நடைபயணம் மேற்கொள்ளுதல் போன்ற விசயங்களில் மிகுந்த காதலுடன் மேற்கொள்பவர். அதிக உணர்ச்சி ரீதியாக பழகுபவரும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த மிகுந்த ஆர்வமும் உடையவருமாக விளங்குவார்கள்.

    உங்கள் துணையுடன் எதையாவது பந்தயம் வைக்க மிகுந்த கூச்சம் படுபவர். காதலுடன் நிறைந்த இரவு உணவு, கடற்கரையில் அமர்ந்து நட்சத்திரங்களை ரசித்தல் போன்றவற்றை மிகவும் விரும்புபவர். இவை அனைத்தும் உங்களுக்கு மகிழ்ச்சியை தருமே தவிர ஒருபோதும் அதனால் அரவணைக்கப்படமாட்டீர்கள். எளிதில் காதலில் விழமாட்டீர்கள், விழுந்துவிட்டால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு மூழ்கி விடுவீர்கள்.

What your first letter of your name says about you – in Tamil

Views: 513 00     உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!