காரணத்தை தவிர்

காரணத்தை தவிர்

      ஒரு ஊரில் ஒரு சிறந்த ஜென் துறவி வாழ்ந்து வந்தார்.அவர் அவரது நான்கு மாணவர்களுக்கு ஒரு செயலை காரணம் சொல்லாமல் செய்து முடிப்பத்தின் அவசியத்தை உணர்த்த விரும்பினார்.

      இதன் காரணமாக அவர் அவரது மாணவர்களுக்கு  ஐந்து நாட்களுக்கு மௌனம் கடைப்பிடிக்குமாறு கூறினார். அவர்களும் குருவின் சொல் படி மௌனமாக இருக்க தொடங்கினர்.

      முதல் இரண்டு நாட்களுக்கு அவர்கள் மௌனமாக இருந்தனர். அடுத்த நாள் நான்கு மாணவர்களும் இரவு உறங்க செல்லும் போது எரியும் விளக்கை யார் அணைப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டது. முதல் மாணவன் யாராவது விளக்கை அணையுங்கள் என்று கூறினான். இதனால் அவனது மௌனம் கலைந்தது.

      இரண்டாம் மாணவன் நாம் மூவரும் இனி மௌனம் காப்போம் என்று கூறி அவனும் மௌனத்தை கலைத்தான்.

      மூன்றாம் மாணவன் நீ என்ன செய்கிறாய்? நீ பேசி விட்டாய்? இவ்வாறு கூறி இவனும் மௌனத்தை கலைத்தான்.

      கடைசி மாணவன் நான் மட்டும் தான் இன்னும் மெளனமாக இருப்பதாக கூறியதால்  அவனுடைய  மௌனமும் கலைந்தது.

      இதிலிருக்கும் நகைச்சுவையை நீக்கி பார்த்தால் ஒரு சிறிய வேலையை செய்யாமல் விட்டதால் இப்பொழுது அனைவரும் மௌனத்தை கலைத்தனர்.

      சில நிமிடங்களில் செய்து முடிக்க வேண்டிய வேலையை செய்யாமல் இருந்ததற்கு காரணம் கூறுவது மனிதனின் இயல்பு. எனவே ஒரு வேலையை செய்ய தொடங்கும் முன் யோசிக்கலாம். ஆனால் தொடங்கியவுடன் அதிலிருந்து பின் வாங்காமலும், காரணம் சொல்லாமலும் செயலை செய்து  முடிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!