ஒருவரின் இறுகப் பற்றியிருத்தலை விடுவித்தல் என்பது அத்தனை சுலபமல்ல. ஆனால் விலகி தான் ஆக வேண்டும் எனும் போது விட்டு விலகி வேகமாக வெளியேறுங்கள். அவ்விடம் இனி நாம் செய்ய ஏதொரு வேலையும் இல்லை. போகும் முன் புன்னகை செய்யாமல் வெறுப்புகளை வீசி செல்லுங்கள், ஒருவேளை புன்னகை அவர்களிடம் மாற்றம் செய்யலாம்.
நாம் செய்தவைகளை நினைத்து நம்மை வெறுத்து விலகச் செய்யுங்கள், அதுவே அவர்கள் இனி பிடித்தவருடன் லயித்திருக்க காரணமாக அமையும். அவரிடம் கனல் வீசி, கோபம் கொண்டு விலகி தூரம் நின்று, அவர் மகிழ்ந்திருப்பதை ரசிக்க தொடங்குங்கள்.