வெற்றிக்கு ஒரு கை போதும்

வெற்றிக்கு ஒரு கை போதும்
    இவன் பெயர் கிரி. இவனுக்கு ஜூடோ மேல் தீவிர ஆர்வம். எங்கு சென்றாலும் எதை செய்தாலும் ஜுடோவை பற்றியே இருக்கும். கிரிக்கு ஜூடோ பயிற்சி பெற வேண்டும் என்ற ஆசை.

    ஆனால், அவனால் பயிற்சி பெற முடியவில்லை. அவனுக்கு சிறு வயதில் விபத்து ஏற்பட்டு இடது கை போய்விட்டது. எனினும் இந்த குறையை பொருட்படுத்தாமல் அவன் வழக்கம்போல இருந்து வந்தான்.

    இவன் அந்த ஜூடோ பயிற்சியில் சேர்த்து விட எத்தனையோ முறை அவன் பெற்றோரிடம் கேட்டும் அவர்கள் உன்னால் ஒரு கை இல்லாமல் சண்டை போடா முடியாது. அவ்வாறு சண்டை போட்டாலும் நீ அடிவாங்குவாய் என கூறி  சேர்த்து விடாமல் விட்டனர்.

    ஒரு நாள் இவன் வழக்கம் போல பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் அவன் வழக்கமான பாதை இல்லாமல் புதிய பாதையில் வீட்டிற்கு சென்றான். அந்த வழியில் ஒரு ஜூடோ வகுப்பு எடுக்கும் இடம் இருந்தது. அங்கு பயிற்சி பெறுவதை வெளியில் இருந்து பார்த்து  கொண்டு இருந்தான்.

    இதே போல் தினமும் அங்கு நின்று அவர்கள் செய்வதை பார்த்து கொண்டு இருந்தான்.

ஒரு நாள் ஜூடோ ஆசிரியர். அவனை இங்கு வருமாறு அழைத்தார்.

    அந்த ஆசிரியர் அவனிடம், “தினமும் இங்கு வந்து நின்று ஏன் பார்த்து கொண்டு இருக்கிறாய்” என்றார்.

    அவன், “எனக்கு ஜூடோ கற்று கொள்ள ஆசை ஆனால் ,எனக்கு ஒரு கை இல்லாததால் என்னால் ஜூடோ விளையாட முடியாது என என் பெற்றோர்கள் கூறிவிட்டனர்.” என்றான்.

    அந்த ஆசிரியர், “நான் உனக்கு கற்று தருகிறேன்” என்றார்.

    அவனும் மகிழ்ச்சியாக பயிற்சி பெற ஆராம்பித்தான். அந்த ஆசிரியர் அவனுக்கு ஒரு குத்து (PUNCH) மட்டும்  பயன் படுத்தும் வித்தையை அவனுக்கு சொல்லி கொடுத்தார்.

    அவனும் தினமும் அந்த குத்தை மட்டும் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து வந்தான்.

    சில மாதங்களுக்கு பிறகு மாநில அளவிலான ஜூடோ போட்டி வந்தது. அந்த ஆசிரியர் அவனுடைய பெயர் பதிவு செய்தார். அவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவனுக்கு ஒரு குத்து வித்தை மட்டும் தெரியும்.

    ஆசிரியரிடம் என்னால் எவ்வாறு இதில் வெற்றி பெற முடியும், என்றார்.

    அவர் அவனிடம், “எதிரிக்காக காத்திரு. வித்தையை நினைவில் வைத்து கொள்.” என்றார்.

    அவனும் ஆசிரியரை நம்பி போட்டிக்கு சென்றான். முடிவு ஆச்சர்யமாக இருந்தது. வெற்றி பெற்றது கிரி தான்.

    அவன் ஆசிரியரிடம் வந்து எவ்வாறு என்னால் வெற்றி பெற முடிந்தது.

    உனக்கு கற்பித்த ஒரு குத்து வித்தையின் அம்சம் என்ன தெரியுமா, “ஒரே குத்தில் எதிரியை வீழ்த்துவது மேலும் இந்த குத்து பழக வேண்டும் என்றால் இடது கையை மடக்க வேண்டும் அது சாதாரண மனிதனுக்கு மிகவும் கடினம் உனக்கு இடது கை இல்லாதது தான் உன் வெற்றிக்கு காரணம்” என்றார்.

    மேலும் வெற்றிப் பெறுவதற்கு ஒரு கை போதும் என்றார். கிரி குழப்பத்துடன் தனது ஒரு கையை பார்த்துக்கொண்டிருந்த வேளையில் ஆசிரியர் சிறு புன்னகையுடன் அது நம்பிக்கையே என்று கூறி தோளைத் தட்டிக்கொடுத்து விட்டு போனார்.

    கிரியின் பெற்றோர்கள் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தனர். கிரியும் மனதார அவர்க்கு நன்றி கூறினான்.

“I fear not the man who has practiced 10,000 kicks once, but I fear the man who had practiced one kick 10,000 times”

Bruce Lee

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!