பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

      உலகின் மிகப் பெரிய பணக்காரராக  போர்ப்ஸ் (Forbes) இதழின் பட்டியலில் அதிக ஆண்டுகள் இருந்துவருபவர் பில் கேட்ஸ் (Bill Gates). 2018 ஆம் ஆண்டில் Fortune 500 நிறுவனத்தில் 110 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டு 26வது இடத்தில் பில்கேட்சின் கம்பெனி உள்ளது.

      பில் கேட்ஸ் அக்டோபர் மாதம் 28 ம் தேதி  1955 ஆம் வருடம் பிறந்தார். அவருக்கு சிறு வயது முதலே கணினியில் ஆர்வமும், அறிவும் இருந்தது. ஆனால், அவரது பெற்றோர் அவர் கல்லூரிக்குச் சென்று வழக்கறிஞர் ஆவார் என்று கனவு கொண்டிருந்தனர் இதனால் பில்கேட்ஸ் 1973  ல் ஹார்வர்ட் (Harvard) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

      பின் தன் கல்லூரிப் படிப்பில் ஆர்வமில்லாமல் தனது கனவிற்காக உழைக்கும் பொருட்டு கல்லூரி படிப்பை முடிக்கும் முன்னரே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை விட்டு விலகினார். 1975 ல் பால் ஆலன் உடன் சேர்ந்து Micro Computer மற்றும் Software இதை இணைத்து மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தை தொடங்கினார். அன்று அவர் எடுத்த கடினமான முடிவு இன்று அவரை உலகின் முதல் நிலை கோடீஸ்வரராக உயர்த்தி இருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் பல அதிர்ச்சியான தொடக்கத்தைக் கொண்டிருந்தது.

      பில் கேட்ஸ் பல தடைகளை தாண்டி அவரின் கனவை அடைந்தார். அவரின் துணிச்சலான முடிவால் இன்று மென்பொருள் மற்றும் தொழில்நுட்பங்களில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளது மைக்ரோசாப்ட்.

 “Don’t compare yourself with anyone in this world. If you do so, you are insulting yourself.”

– Bill Gates

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!