வாழ்வில் அன்பு செய்வதும், பழகுவதும் எத்தனை இயல்பான காரியமோ அது போல பிரிந்து செல்லுதலும் இயல்பு தான். ஆகவே அதை ஏற்கப் பழகுகிறேன். நீங்கள் விட்டு விலகுவதால் உங்கள் அன்பை ஒருபோதும் சந்தேகிக்க மாட்டேன், என்னை விட அதிகமாக அன்பு செய்யவும், நேரம் கழிக்கவும் வேறு உறவு கிடைத்து விட்டதை எண்ணி மனமகிழ்ந்து வழியனுப்பி வைக்கிறேன்.