பப்புகஞ்சி (குழந்தைகளிடம் விரலை வைத்து சோறு, குழம்பு, அப்பளம், வடை என விளையாடுவது), தாயம், கோலி, கில்லி போன்ற விளையாட்டுகள் இப்போது நடைமுறையில் இல்லை. ஆனால், அவற்றில் சில விளையாட்டுகள் டிஜிட்டல் வடிவத்தில் வருகை தந்து நமது போனில் இடம் பெற்றிருகிறது.
விளையாட்டுகள் அனைத்தும் நமக்கு ஏதேனும் ஒரு வாழ்க்கை பாடத்தினை நமக்கு கற்பிக்கிறது. மேலும் அது நமது உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்கிறது.
ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின் வந்த விளையாட்டு கிரிக்கெட். இது அதிக உடலுழைப்பு இல்லாத விளையாட்டு என்றாலும் இதை விளையாடுவதற்காக இன்றைய தலைமுறை வெளியே செல்வதை நினைத்தால் சற்று ஆறுதலாக உள்ளது. இது தான் இப்போதைய சமூகத்தின் நிலைமை.
ஏன் இந்த அவல நிலை என்றால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி அவர்களை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் வீட்டிற்குள் முடக்கி வைத்து விடுகின்றன.