செல்வத்தின் மனநிறைவு

செல்வத்தின் மனநிறைவு

      ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். நாட்டை சிறப்பாக ஆட்சி செய்துகொண்டு வந்தார். அவரிடம் நிறைய செல்வம் இருந்தது.செல்வம் வருடம் வருடம் கூடி கொண்டே போனது ஆனால் அவருக்கு மன நிம்மதி மட்டும் கிடைக்கவில்லை.

      இதனை பல நாட்களாக எண்ணி கொண்டே இருந்தார். ஒரு முறை அவரின் நாட்டிற்கு ஜென் துறவி ஒருவர் வருகை தந்தார். அவரின் வாக்குகள் சிறப்பாக இருப்பதாக  மக்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

      இதனால் ராஜாவும் அவரிடம் சென்று அவரது மனகவலைகளை கூறி விட்டு அதை சரி செய்து மன நிறைவடைய என்ன செய்ய வேண்டும் என்று கேட்க சென்றார்.

      அவரிடம் சொன்ன பிறகு துறவி இதை நான் உனக்கு தெளிவுபடுத்துகிறேன் என்று கூறி விட்டு என்னுடன் மலை ஏறி வா என்றார். அவரும் வருவதாக ஒப்புகொண்டார். மலை ஏறும் போது மலை அடிவாரத்தில் 3 கனமான கல்லை தூக்கி வர சொன்னார். ஆனால் அவனால் தூக்கி கொண்டு ஏற முடியவில்லை. இதை துறவியிடம் கூற அவர் ஒரு கல்லை தூக்கி போட்டுவிட்டு ஏறுமாறு கூறினார். அவரும் அதே போல் ஏற 2 கல்லை கொண்டு ஏற முடியவில்லை எனவே இன்னொரு கல்லை தூக்கி போட்டு விட்டு ஏறுமாறு கூறினார். சிறிது தூரம் சென்ற பின் ஒரு கல்லை தூக்கி கொண்டும் ஏற முடியவில்லை அதையும் தூக்கி போட்டு விட்டு ஏற சொன்னார். இதனால் அவரால் எளிதாக ஏற முடிந்தது.

      உச்சியை அடைந்த பின் துறவி கூறினார் உன்னால் எவ்வாறு கல்லின் கனத்தை தாங்க முடியாமல் தினறினாயோ அதைப்போலவே உன்னால் செல்வதை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ முடியாது. எவ்வாறு ஒவ்வொரு கல்லாக தூக்கிபோட்டதால் உன்னால் நிம்மதியாக நடக்க முடிந்ததோ அதே போல் உன்னிடம் உள்ள செல்வதை பிறருக்கு கொடுக்க கொடுக்க உனக்கு மன நிறைவு பெரும். நீயும் நிம்மதியுடன் இருக்கலாம் என்றார். இதனை அறிந்து கொண்டு ராஜாவும் நிம்மதியுடன் வாழ்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!