2000 ஆண்டு பழமை மிக்க கரூர் பல அரசுகளின் கீழ் ஆளப்பட்டுள்ளது. குறிப்பாக சேர, சோழ, பாண்டிய, நாயக்கர்கள், திப்பு சுல்தான், ஆங்கிலேயர்கள் போன்றோர் முக்கியமான அரசுகள்.
சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. மேலும் சேரர்கள் இருந்ததற்கான கல்வெட்டுகள், நாணயவியல், தொல்பொருள் மற்றும் இலக்கிய சான்றுகள் நிரூபிக்கின்றன.
அதில் முக்கியமான பாய்கள், மண் பானைகள், செங்கற்கள், மண் பொம்மைகள், ரோமன் நாணயங்கள், சேர நாணயங்கள், பல்லவ நாணயங்கள் இன்னும் நிறைய கிடைக்கப்பெற்றன.