வெற்றிக்கு காரணம் கடவுளா?

வெற்றிக்கு காரணம் கடவுளா?

      எல்லா வளங்களும் பெற்று மிகவும் செழிப்பாகவும் மிகப்பெரிய பரப்பளவை கொண்ட அழகிய நாடு  அது. அந்த நாட்டு படைத்தளபதி மிகவும் தன்னம்பிக்கை கொண்ட ஒருவர். அது மட்டும் இல்லாமல் மனிதர்களினால் எந்த அளவு சாதிக்க முடியும் என்பதையும் மனிதர்களின் மனபோக்கையும் நன்றாக உணர்ந்தவர்.

      ஒரு கட்டத்தில் அந்த நாட்டிற்கும் மற்ற ஒரு நாட்டிற்கும் போர் மூண்டது. இரு நாட்டு படைகளும் மும்முரமாக சண்டை போடு கொண்டிருந்தனர்.  எதிரி நாட்டு படைகளிடம் தன் நாட்டின் படை வீரர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். இதனால் எதிரி நாட்டு படையை விட இவரது படை மிகவும் சிறியதாக மாறிவிட்டது. கிட்டதட்ட எதிரி நாட்டிடம் வீழ்ந்து விடும் நிலைமை.

      ஆனால் படைத் தளபதி இந்த போரை வென்று விடுவோம் என்று  மிகவும் உறுதியாக இருந்தார். இவரை தவிர துணை தளபதி உள்ளிட்ட அவரது வீரர்களுக்கும் இந்த நம்பிக்கை துளி அளவு கூட இல்லை. மற்ற அனைவரும் போரை விட்டு ஓடி விடுவதில் குறியாக இருந்தனர்.

      என்ன தான் நம்பிக்கை பலமாக இருந்தாலும் தனி ஆளாய் போர் களத்தில் என்ன செய்ய முடியும்?

தளபதி ஒரு முடிவு எடுத்தார்……

     அன்று கடைசி நாள் போர். தளபதி போருக்கு செல்லும் வழியில் அவர்கள் வழிபடும் கோவில் உள்ளது. அந்த இடத்தை அடைந்தவுடன் தளபதி வீரர்களை அழைத்து

“வீரர்களே நம் படை சிறியதாக ஆகி விட்டது. இதனால் நாம் போருக்கு செல்வதை பற்றி ஒரு முடிவுக்கு வருவோம். என் கையில் ஒரு நாணயம் உள்ளது. அதை சுண்டி விடுகிறேன். அதில் தலை விழுந்தால் நமக்கு வெற்றி நிச்சயம். பூ விழுந்தால் நாம் இப்படியே வீடு திரும்பி விடுவோம்”

      துணை தளபதிக்கும் மற்றும் வீரர்களுக்கும் இது நல்ல யோசனையாக பட்டது. எனவே அவர்களும் இந்த முடிவை கடவுள் தீர்மானிக்கட்டும் என்றனர்.

நாணயத்தை சுண்டினார் தளபதி. நாணயம் காற்றில் பறந்து சுழன்று மண்ணில் விழுந்தது.

தலை….!!!!!!!!!

      தலை விழுந்தவுடன் அனைவரும் ஆர்பரிதனர். வெற்றி நமதே என்ற முழக்கங்களுடன் அனைவரும் போருக்கு சென்றனர். வெற்றியை கடவுள் ஏற்கனவே கொடுத்து விட்டது போல சண்டையிட்டனர்.

அதிசயம் நிகழ்ந்தது……….

கடவுள் வாக்கு பலித்தது…….

      அந்த சிறிய படை பெரும் படையை வீழ்த்தினர். வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.

      துணை தளபதி தளபதியிடம் சென்று “நாம் வென்றுவிட்டோம் கடவுளின் தீர்ப்பை யாராலும் மாற்ற முடியாதல்லவா?” என்றான்.

அவனிடம் தளபதி “ஆமாம், அது உண்மை தான்” என்ற படி அவனிடம் சுண்டிய நாணயத்தை கொடுத்துவிட்டு சென்றான்.

அந்த நாணயத்தின் இரு பக்கங்களிலும்

தலை!!!!!!

வெற்றிக்கு காரணம் கடவுளா????????

Comment your thoughts below…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!