வாழ்வே போராட்டம் தான்

வாழ்வே போராட்டம் தான்

      ஜென் துறவி அவர்களது மாணவர்களுக்கு வாழ்கையை பற்றி கற்று கொடுக்க நினைத்தார். மாணவர்களை அழைத்தார்.அப்போது அவர்களிடம் ஜென் குரு எடுத்துக்காட்டாக ஒரு பட்டாம்பூச்சி இந்த உலகை காண்பதற்கு முன் எவ்வளவு கடினமான நிலைமைகளை தாண்டி பூமிக்கு வருகிறது என்பதை அவர்களுக்கு காட்ட விரும்பினார். மாணவர்களை பட்டாம்பூச்சி கூட்டிற்கு அழைத்து சென்று பட்டாம்பூச்சி நீண்ட போராட்டங்களுக்கு பிறகு கூட்டை விட்டு வெளியே வந்துவிடும். நீங்கள் யாரும் அதற்கு உதவ கூடாது என்று கூறி விட்டு சென்று விட்டார் குரு.

      அந்த நிகழ்வினை பார்த்துகொண்டிருந்த ஒரு சீடன் அது ஓட்டை உடைக்க மிகவும் கடினமாக முயன்று கொண்டிருந்தது என்று நினைத்து  ஒரு குச்சியை வைத்து லேசாக உடைத்துவிட்டான்.இதனால் பட்டாம்பூச்சி வெளியே எளிதாக வந்து விட்டது. ஆனால் அதனால் பறக்க முடியாமல் இறந்து விடுகிறது. இதனால் அதன் இறப்பிற்கு அந்த சீடன் காரணமாகி விட்டான்.

     இதனால் அந்த மாணவன் அழுது கொண்டிருந்தான். பிறகு துறவி அந்த இடத்திற்கு  வந்து

      ஏன் அழுகிறாய் என்று கேட்ட போது மாணவன் நடந்ததை கூறினார். பின் குரு அவனிடம் பட்டாம்பூச்சி அத்தகைய போராட்டத்தை அனுபவிக்க காரணம், அதன் சிறகுகள் நன்கு வலுபெற வேண்டும் என்பதற்காகவே என்று குரு கூறினார்.

      இதே போல தான் நாமும் நமது வாழ்வில் இன்பமாக வாழ பல போராட்டங்களை சந்திக்க நேரிடும். அதற்காக மனமுடைந்து விட கூடாது .போராட்டங்களை சந்திக்க சந்திக்கத் தான் நமது மனமும் வலுவடையும். பின் எதற்கும் துணிச்சலோடு போராடி, வாழ்வில் முன்னேறலாம்.

      இதன் மூலம் தன் மாணவர்களுக்கு  வாழ்க்கை என்றால் என்ன? என்பதை புரிய வைத்துவிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!