எளிதில் அன்பு,அக்கறை காட்டக் கூடிய மாயா அதனை தன் பெற்றோர்,நண்பர்களிடம் இருந்தும் எதிர்பார்த்தாள்.ஆனால்,அவளது எதிர்பார்ப்பு அவ்வளவு எளிதாக அமையவில்லை.அவளுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
அவள் அன்பு காட்டிய யாரும் மாயாவுக்கு உண்மையாக இல்லை.நண்பர்கள் என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும் அவளது கனவில் கூட அவளது நண்பர்களே அதிகம் வருவார்கள்.நண்பர்களுடன் இருப்பதையே அதிகம் விரும்புவாள்.
வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு சென்ற போது அவளது தேவை வெறும் அன்பாக இருந்தது.அன்பின் தேடல் அவளுக்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தந்தது.அதுவே அவளது பலவீனமாகவும் ஆனது.
திடீரென மாயாவின் தந்தை இறந்து விட்டார்.அவளது வாழ்வில் மிக முக்கியமான ஒருவர்.அவர் அவளை விட்டு சென்றது.மிகுந்த ஏமாற்றத்தையும், வலியையும் கொடுத்தது.மாயாவின் தந்தை இறந்த பிறகு அவளது வாழ்க்கை மிகவும் கவலையாக ஆனது.அதன் பின் அவளது வாழ்க்கை அவளுக்கு நிறைய பாடங்களை கற்று கொடுத்தது.