என் பலவீனம் இந்தக் காதல்!

என் பலவீனம் இந்தக் காதல்!

எழுத்தாளர் – யாரோ ஒருவன்

    “உன்னை ஏன் இவ்வளவு பிடிக்கிறது? என்று எனக்குத் தெரியவில்லை”

இந்த வார்த்தைக்குத் தகுதியான ஒருத்தர்க்கிட்ட, 
நாம கண்டிப்பா
அவங்களே கதியா இருப்போம்.

இன்றளவும் இதற்கு
யாருக்காவது
மிகச் சரியான
சொல்லத் தெரிந்த
பதில் ஏதேனும் அகப்பட்டிருக்கிறதா?

“இன்னின்ன காரணங்களால் ஆனது”
என்ற பெயரில்,
ஆயிரத்தெட்டு காரணிகளை
சொல்லிக் கொண்டிருப்போம்.

நெறய சிரிக்க வச்சிருக்க!
நெறய சந்தோஷத்த கொண்டாடுற தருணங்கள தந்திருக்க!
நெறய கண்ணீரை
கண்ணுல ஏந்த வச்சதும் நீதான்!
அதுக்குப் பகரமா
ஆனந்தத்த கொடுக்குறதும் நீதான்!

நெறைய நினைவுகளை
பத்திரப்படுத்தி வச்சிக்கிட்டு…!
அழச் செய்றது,
புன்னகைக்கச் செய்றது,
பதைபதைப்புடன் அந்த நொடிகளை
கடக்கச் செய்றது,
எல்லாமே நீ தான்.

அன்றாடம் புதுப்புது
அர்த்தங்களா என் கண்களுக்கு தெரியுற!
தினம் தினம் எதையோ ஒன்ற
நான் ரசிக்கவோ,
கொண்டாடவோ வச்சிடுற!
நீ செய்ற ஏதோவொன்றுல
என்னை லயித்துப் போகச் செய்ற.

கோபப்பட வைக்கிற!
ஆத்திரப்பட்றமாதிரி நடந்துக்குற!
கோபத்துல சில நேரம்
உன் இயல்புகள் கூட
என்ன எரிச்சலடைய வச்சு இருக்கும். அப்போது அத நீ மறுதலித்து
பேசிட்டு இருக்குறத,
கேக்குற அளவுக்குக்கூட
பொறுமை எனக்கு இருந்ததில்ல.

கோபங்கள்ல கூட
அக்கறை உணர்வும்,
தீராக் காதலின் வெளிப்பாடும்  இருக்கும்.
அதை உணர்ந்தவன் நான் மட்டுமே.

நான் கடந்து வந்த
எத்தனையோ மனுஷங்க கிட்ட
எனக்குத் தெரியாத ஏதோவொன்று, உன்கிட்ட மட்டும் எனக்கு பிடிச்சிருக்கு!
யாரையும் உன் இடத்துக்கு நிகரா வச்சி நினைக்கக் கூட மனசுல தெம்பில்ல! அவ்வளவு வலுவான
ஊன்றுதல் நீயெனக்கு!

மனசுக்கு அமைதி தேவப்பட்டாலோ! நிதானித்து நிக்க
ஒரு தரிப்பிடம் அவசியப்பட்டாலோ!
மனசு உன்னத்தான் நாடுது.
நா அழுது தீர்க்குற கண்ணீர உள்வாங்கிக்கிட்டு,
அத நிவர்த்தி செய்ற வார்த்தைகளை
நீ மட்டும்தான் அறிவாய்.
உன்கிட்ட வந்து பேசிட்டா,
எல்லாமே சரியாயிடும்னு நம்புறேன்.

ஆற்றுப்படுத்தி வைக்க
உன்னால மட்டும் தான் முடியும்னு
என் மனசு சொல்ற கணங்கள்ல,
நீ மட்டும் தான் எனக்கான
ஒட்டுமொத்த
என் பாதியாய் தெரிஞ்சிருக்க.

இது எல்லாத்தாலயும் தான்
உன்ன இவ்வளவு பிடிக்கும்னு 
நான் நம்பிட்டு இருக்குறப்பவே…!
எதற்குள்ளும் மட்டிட்டு
சொல்ல முடியாத அளவுக்கு,
அதிக அருகதை உள்ள
ஒரு காதலுக்குள்
உன்ன நான் வாழ வச்சிட்டு இருக்கேன்.

என் உலகில்
அழகாய் ஆசீர்வதிக்கப்பட்ட
என் பலவீனம் இந்தக் காதல்!

எழுத்தாளர் – யாரோ ஒருவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!