இந்த கதையில் ஜான் மற்றும் சாரா இவர்களின் காதலைப் பற்றி பார்ப்போம். ஜான் ஒரு அழகிய ஆண்மகன். அவனுக்கு இயற்கை மற்றும் நிழற்படம் (Photography) ஆகியவற்றின் மீது அர்வம் அதிகம். சாரா இவளுக்கோ ஓவியர் ஆகா வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. ஆனால் அவளுக்கு அவளை தவிர யாரும் கிடையாது. அவள் ஒரு செல்வந்தன் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்ததால் அவளது ஆசை பகல் கனவாக இருந்தது. அவள் ஒரு மலைவாழ் இடத்தை சேர்ந்தவள்.
ஒரு நாள் அந்தி மாலை பொழுதில் ஜான் நிழற்படம் (போட்டோ) எடுக்க மலைப்பகுதிக்கு சென்றார். அவன் மலையை மேகம் சூழ்ந்த மற்றும் அழகிய மரங்கள், பூக்கள் ஆகியவற்றை நிழற்படம் (போட்டோ) எடுத்து கொண்டிருந்தார். அந்த பூத்து குலுங்கிய மரத்தின் அடியில் சாரா அழகாக அமர்ந்திருந்தாள். அவள் நீளமான கூந்தலுடன், அழகிய மான் போன்ற கண்ணை கொண்டிருந்தாள். ஜான் அவளுடன் சேர்த்து இயற்கையை படம் பிடித்து இருந்தான். அந்த அழகிய காட்சியை இந்த உலகத்தில் வேறு எவரும் அப்படி பட்ட மிகவும் அழகிய காட்சியை பார்த்திருக்க மாட்டார்கள் என்று பெருமிதத்துடன் இருந்தான்.
அப்பொழுது சாரா அவனை பார்த்தாள் பார்த்தவுடன் அவளுக்குள் எதோ ஒரு இனம் புரியாத உணர்வு ஆனால் அவளுக்கு அது எந்த மாதிரியான உணர்வு என்று புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்.அந்த சமயத்தில் ஜானுக்கும் அதே போன்ற உணர்வு ஏற்பட்டது . அவளின் அருகில் வந்து ஜான் அவளின் கண்ணை பார்த்துவிட்டு திடீரென்று அவளை முத்தமிட்டான். அவள் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த இடத்திலிருந்து ஓடினாள். ஜானும் அந்த இடத்திலிருந்து சாராவை பற்றி சிந்தித்துகொண்டே சென்றான். மேலும் அவன் எதுவும் சொல்லாமல் முத்தமிட்டதை நினைத்து வருந்தினான். சாரா வீட்டுக்கு சென்றவுடன் அவளுக்கு தோன்றியே உணர்வு என்னவென்று புரிந்தது. அவள் அவனை காதலிக்கிறாள். மேலும் அவள் அந்த இடத்தில் இருந்து அவனை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் சென்றதை நினைத்து வருந்தியதுடன் அவனை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று தெரியாமல் புலம்பிக்கொண்டிருந்தாள்.
சாரா அடுத்த நாள் அதே மலைக்கு சென்றாள் அவன் மீண்டும் வருவான் என எதிர்பார்த்தவாறு காத்திருந்தாள். ஆனால் அவன் அன்று வரவில்லை. இதனால் அவள் மனம் வருந்தினாள். ஆனால் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது ஒரு நாள் அவன் வருவான் என்று. அன்றிலிருந்து அவள் தினமும் அந்த இடத்திற்கு வந்து அவனுக்காக காத்துக்கொண்டிருப்பாள். இவ்வாறே ஒரு மாதம் கழிந்தது .அவனை ஏக்கத்துடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதே போல் ஜானும் அவளை மறக்கமுடியாமல் தவித்து கொண்டிருந்தான். ஜானின் மனது எப்பொழுதும் அவளிடம் சென்று தன் காதலை சொல்லுமாறு கூறிக்கொண்டிருந்தது.அவன் அவளை கண்டுபிடிப்பது கடினம் என்று நினைத்து கொண்டிருந்தான். ஜான் அவளை எந்த தேதியில் எந்த இடத்தில் பார்த்திருந்தானோ அதே போல் அங்கு சென்று பார்ப்பதாக அவனுக்கு அவனே கூறி கொண்டான்.