நினைவில் ஜானு

நினைவில் ஜானு

       அன்று எனது நாள் பேருந்து நிறுத்தத்தில் தொடங்கியது. அது பேருந்துகளை மட்டும் நிறுத்துமிடம்  அல்ல. பல காதல் கதைகளின் நினைவலைகளை சுமந்து கொண்டும்,இனி வரும் காதலர்களை வரவேற்றுக்கொண்டும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இடம் தான் பேருந்து நிறுத்தம்.

      அந்த பேருந்து நிறுத்தம் என்னையும் விட்டு வைக்கவில்லை. அந்த பேருந்து நிறுத்தத்தின் அருகில் டீ கடை ஒன்று இருந்தது. ஒரு நாள் நான் அங்கு   சென்றிருந்தேன்.

அன்று தான் …….

அந்த நிமிடம் தான் ……

என் எதிர்காலத்தின் முழு சந்தோசத்தையும் ஒளித்து வைத்திருந்த வளை கண்டறிந்த நிமிடம்…..

 

அவளை, என் அவளை  பார்த்த தருணம்……

அவளை  ரசித்த தருணம்…….

மெய் மறந்து உறைந்த தருணம்…..

 

      அன்று அவளை பார்த்த பின்பு நான் நம்பிக் கொண்டிருந்த அறிவியல் பொய்யானது. அவளை பார்த்தது மூளைக்குச் செல்லாமல் நேராக இதயத்திற்கு சென்றது போலும்.

மிக அழகான பெண் அவள் என்றது இதயம்.

இதயத்தால் பேச முடியும் என்று உணர்ந்த தருணம்….

 

நீளமான அழகான கூந்தல் அவளுக்கு……..

      அந்த கூந்தலுக்குள் ஒளிந்து கொண்டு எட்டி பார்த்தவாறு இருந்தது அவளின் தோடு…

வளைந்த புருவத்தின் அழகு சிறிய மச்சத்தில் முடிந்தது.

      அவளின் இதழ் மேல் போடப்பட்டிருந்த ரோஜா நிற சாயம் என்னை அவளின்பக்கம் இழுத்தது.

பிறை போன்ற அவளின் நெற்றியில் மெல்லிசான கோடு மற்றும் சிறிய வட்ட வடிவ பொட்டு அவளின் நெற்றியை அலங்கரித்தது.

அவளின் மையிட்ட கண்   என்னை போதையில் ஆழ்த்தியது. 

உலகில் இருப்பதிலேயே மிகவும் அழகானது, போதையானது.

அவளின் கண்ணை பார்த்ததிலிருந்து என் இமைகள் செயலிழந்தன.

மேலும் அந்த கண் அவள் மேல் வைத்த பார்வையை மாற்ற முடியாமல் பார்த்து கொண்டது.

      டீ யை பாதியில் வைத்து விட்டு அவளை நோக்கி சென்று அவள் முன் நின்று அவளது கண்களை பார்த்தவாறு 2 நிமிடங்கள் கழிந்தன. அடுத்த நிமிடம் அவன் அவளிடம் “I love you… . என் பெயர் ராம். செல்போனை அவளிடம் கொடுத்து நான் இதை 3 நாட்கள் கழித்து  இதே இடத்தில் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி விட்டு திரும்பி 2 அடி நடந்து விட்டு மீண்டும் திரும்பி அவளிடம் சென்று 3 நாளில் என்னை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் என் செல்போனில் இருந்து அம்மா என்ற எண்ணை அழைத்து தெரிந்துகொள்“ என்று கூறி விட்டு பைக் எடுத்துக்கொண்டு வேகமாக சென்று விட்டான்.

      இந்த நிகழ்வுகள் இன்றும் என் கண் முன்னே நடப்பது போலவே இருக்கிறது.

அன்று பார்த்த அவள் தான் என் மனைவி.

ஆம், அவளே தான்.

அவளும் நானும் ஒன்றாக இருந்த அழகான நினைவுகளையும், சிறந்து தருணங்களையும்

அசை போடவே

நான் 38 வருடங்களுக்கு பிறகு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.

 

ஏனென்றால், அவளின் உடல் என்னை விட்டு மறைந்து விட்டது.

அவளுடன் வாழ்ந்த

அந்த அழகிய நினைவுகளை  சேகரித்த படி

64 வயதுள்ள கிழவன் ராம்.

என்றும் என் நினைவில் ஜானு.

-Mr.G

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!