காலை பழக்கவழக்கங்கள்

காலை பழக்கவழக்கங்கள்

      எவன் ஒருவன் தன்னை சரி செய்து கொள்கிறானோ அவனால் சமுதாயம் சரி செய்யப்படும். பிறர் கூறும் அறிவுரையால் தன்னை மாற்றி கொள்பவர்களை விட தன்னை தானே சரி செய்து கொள்பவர்கள் வாழ்வின் வெற்றியை அடையக்கூடிய தருணத்தை அருகில் பெற்றிருப்பார்கள். அதே போல் வைரத்தை கூட  வைரத்தால் தான் வெட்ட முடியும் அதனால் தான் அதன் பொலிவும், மதிப்பும் அதிகம். அதே போல பொலிவையும், மதிப்பையும் பெற காலை பழக்க வழக்கங்கள் அதிகமாக உதவி செய்கிறது. இவ்வுலகில் வெற்றி பெற்ற அனைவருமே காலை பழக்க வழக்கங்களை கடை பிடித்தவர்களே. நாம் அனைவரும் நம் வாழ்வில் பின்பற்ற வேண்டிய 7 காலை பழக்க வழக்கங்கள்.

அதிகாலை எழுதல்:

   பல ஆய்வுகளின் முடிவில் அதிகாலையில் எழுபவர்கள் அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், வெற்றியுடனும் காணப்படுவதாக கூறப்படுகிறது. அதிகாலை என்பது 4.30 மணிக்கெல்லாம் துவங்கி விடுகிறது.

      அதிகாலை எழ வேண்டும் என எண்ணுபவர்கள் இரவில் சீக்கிரம் உறங்க செல்வது நல்லது. 6-8 மணி நேரம் உறங்க இயல்பான மனிதருக்கு போதுமானது. அதற்கேற்ப உங்களுடைய நேரத்தை குறித்து கொள்ளுங்கள். எழுந்தவுடன் உங்களது கைபேசியைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அதில் வரும் குறுஞ்செய்தியோ அல்லது மற்றவையோ அந்த அதிகாலை பொழுதை வீணடிக்கலாம் ஆகையால் தவிர்ப்பது நல்லது. அதிகாலை எழுவதின் பயன்களாக மற்ற நாட்களை விட வேலை செய்ய அல்லது குறிப்பிட்ட வேலையை முடிக்க கூடுதல் நேரம் கிடைக்கும். மனசோர்வை விலக்கும். மேலும் மன அமைதியை பெற்றுத் தரும். ரத்த ஓட்டத்தை சீர் செய்யும், சிறந்த திட்டத்தை ஏற்படுத்த வழிவகை செய்கிறது.

அமைதியான முறையில் இருப்பது:

   அதிகாலை எழுந்த பிறகு அமைதியான நிலையில் தியானம் செய்வது அல்லது இறைவனை வழிபடுவது ஆகச்சிறந்தது. அமைதியை பெறுபவன் அணைத்து பிரச்சனைகளையும் ஒதுக்கி கொள்கிறான். 

   கோபத்தில் எடுக்கப்படும் முடிவை விட  அமைதியான முறையும் எடுக்கப்படும் முடிவு மகத்தானதாகவே அமைகின்றது. கோபத்தில் எடுக்கப்படும் முடிவு சிந்திக்காமல் இழப்பை ஏற்படுதகூடியதகவே உள்ளது. அமைதியில் சிந்தித்து எதிர் காலத்தை எண்ணி எடுக்கப்படும் முடிவு நன்மைக்கு வித்தாகிறது. காலை பொழுதில் அமைதியை கடை பிடிப்பதால், தன்னைத்தானே சுய ஆய்வு செய்து கொள்ளலாம். மேலும் உங்கள் கவனத்தை மேம்படுத்துகிறது. உடல் உபாதைகளான தலைவலி மற்றும் ஒற்றை தலை வலி நீங்க உதவுகிறது.

தண்ணீர் அருந்துதல்:

   வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது உடல் மற்றும் மனதை சீராக வைத்துகொள்ள உதவுகின்றது . தண்ணீர் மனிதனின் முக்கிய மூலக்கூறாக உள்ளது. நாள் ஒன்றுக்கு மட்டும் ஒரு மனிதன் சராசரியாக 8 முதல் 10 குவளை நீர் அருந்த வேண்டும்.

    அவ்வாறு செய்தால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்க செய்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. தேவையற்ற  கழிவுகளை வெளியேற்றவும் உதவி செய்கிறது. ஜப்பானியர்கள் நீர் அருந்தும் முறையை ஒரு சிகிச்சயாகவே செய்து விடுகின்றனர். அதனை ஜப்பானிய நீர் சிகிச்சை (Jappaness Water Theraphy)  என்று அழைகின்றர்கள். அவர்கள் மேற்கொள்ளும் முறைகள், வெது வெதுப்பான நீரை குடிப்பது. எலும்பிச்சை சாற்றை நீரில் கலந்து அருந்துவது, எலும்பிச்சை சாற்றுடன், தேன் கலந்து பருகுவது.அவ்வாறு செய்தால் உடல் எடை குறைவதுடன், உடல் எடையை கட்டுபாடாக வைக்க உதவுகிறது.

சூரிய ஒளி உடம்பில் படும்படி செய்தல்:

  சூரிய ஒளியால் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைகின்றது. காலையில் சூரியனைப் பார்த்து வணங்குவது கூட மிக நல்லது. அதனை சூரிய நமஸ்காரம் என்று கூறுவர். வைட்டமின்-D  எலும்பிற்கு மேலும் வலிமை ஏற்படுத்தும், செரிமான உறுப்புகளை தூண்டும், கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மன அழுத்ததை தவிர்கிறது. கண் நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள உதவுகிறது. தூக்கம் மற்றும் எழுதல் சுழற்சியை சரியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தோல் நோய் போன்றவற்றிலிருந்து காத்துக்கொள்ள வழிவகை செய்கிறது.

உடற்பயிற்சி செய்தல்:

ஒவ்வொரு மனிதனுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடல் எடையை கட்டு பாட்டிற்கு வைத்துகொள்ளவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் நாட்கள் முழுவதும் உற்சாகத்துடனும், புத்துணர்வுடன் இருக்க வழிசெய்கிறது. தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதுடன் இருதயம் சார்ந்த நோய்களில் இருந்து விடுபட முடிகிறது.

திட்டமிடுதல் (அல்லது) சுய மேம்பாட்டை ஏற்படுத்துதல்:

    சிறிய தொடக்கம், பெரிய முடிவிற்கு காரணமாக உள்ளது. நாம் நாள் ஒன்றுக்கு செய்யும் திட்டம் படிப்படியாக உற்சாகத்தையும்,ஊக்கத்தையும் தருவதோடு, வெற்றிக்கு அடித்தளமாகவும் இருக்கிறது.

   அந்த நாள் முழுவதும் செய்ய வேண்டிய வேலையை முன் கூடியே திட்டமிட்டு செயல்பட்டால் சிறப்பானதாக முடியும். நேரத்தை கையாளும் திறனும் மேம்படுகிறது. தனக்கு தானே உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு தான் அடைய வேண்டியதை நினைத்து செயல்பட்டால் அது எதிர்காலத்திலும் பயனுள்ளதாக இருக்கும்.

படித்தல் மற்றும் எழுதுதல்:

   படிப்பது மிகவும் சிறந்த ஒன்று அதனை குறிப்பெடுத்து அதனை பயன்படுத்துவதும் நன்று. காலை எழுந்து படிக்கும் வழக்கம் மிகவும் நல்லது. ஆனால் தவிர்க்க வேண்டியது, செய்தித்தாள் படிப்பது, போன்றதாகும்.

   அதற்கு பதிலாக நாவல்கள், ஆன்மீக புத்தகம் சுய மேம்பாட்டை வளர்க்க உதவும் புத்தகங்கள் போன்றவை நல்லது. படிப்பது நம் மூளைக்கு பயிற்சிக் கொடுக்கும் ஒன்றாகும். மேலும் அறிவாற்றலை பெருக்கி கொள்ள உதவும். தனிமையில் இருந்து நம்மை விளக்கி கொள்ளவும், பயணநேரத்தில் படித்து நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தவும், அறிவை பெருக்கி கொள்ளவும் உதவுகிறது. குறிப்பெடுக்கும் பழக்கத்தை கைகளால் எழுதிபழகுங்கள், வாழ்கையில் இலக்குகள் அனைத்தையும் எழுதி மனதில் நிலை நிறுத்துங்கள் அது வாழ்வின் வெற்றி பாதையை பிடிக்க உதவும்.

   இந்த 7 பழக்கங்களை கடைப்பிடிப்பவன் வாழ்வில் வெற்றி அடைவான். இலக்கினை அடைய தடை கற்களை படிகற்களாக மாற்ற இந்த பழக்கவழக்கங்கள் மிகவும் ஊன்றுகோலாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

-Delsy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!