என்னவளே சபு

என்னவளே சபு

எழுத்தாளர் – யாரோ ஒருவன்

அவள் என்னவள் சபு.

எப்போதெல்லாம் அவள்  முகம் காண்கிறேனோ அப்போதெல்லாம் புதிதாக பிறந்ததைப் போல ஒரு ஆனந்தம் கொள்கிறேன்.பசியால் தாயின் மார்பார்த்து அழும் குழந்தை போல உந்தன்  பேரன்பிற்கு உன் முகம் பார்த்தழுகிறேனடி.தாயைக் காணாதழும் குழந்தைபோல உன்னைக் காணத பொழுது நான் தவித்துப் போகிறேன். என் வாழ்வின் தேவதையே எப்போதும் எனை கையில் ஏந்திக் கொள்.

அள்ள குறையாத அன்பின் ஊற்றே,எனை உன்னுள் மூழ்கப் போகச் செய்துவிடு. நீ தந்த முத்தத்தின் ஈரம் இன்னும் என் கன்னத்தின் ஓரத்தில் இருக்கிறதடி, நெடுநாள் கழித்து நிலத்தை அடையும் மழைத்துளிகளின் சாயல் அது.நான் கேட்கும் பாடல்கள் அனைத்திற்கும் உன் குரலின் சாயலையே உணர்கிறேனடி.நான் செய்யும் தவறுக்கு நீ தரும் தண்டைனைகள், தவறு செய்த குழந்தைக்கு அதன் தாய் தரும் தண்டனையின் சாயலடி.

பின் எனைத் தண்டித்ததற்காக நீ அழும்போது வெளிப்படும் ஒரு துளி கண்ணீருக்கு சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் முத்துக்கான சாயலடி. என்னுடனே உயிர் பிரியும் வரை வரக்கூடிய உனக்கு என்ன செய்ய போகிறேன் என்று எண்ணும் பொழுது,என் வாழ்வை மொத்தமாக உன்னிடம் தருவதை தவிர வேறெதுவும் தோன்றவில்லை. எப்போதும் என்னுடனே வரப்போகிற உனக்காக நான் என்ன எழுதிவிட முடியும், இருந்தாலும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்,என்றாவது ஒருநாள் முடித்த விடுவேனென்ற நம்பிக்கையில்……….

நீயென் வரமடி,

என் வாழ்வின் சாபம் நீக்கியவள்.

நேசத்தின் அர்த்தம் உணர்த்தியவள்.

என் வாழ்விற்கு கதி மோட்சம் நல்கியவள்.

வாழ்வில் வேறென்ன வரம் வேண்டும் அவளென் துணையாய் இருந்து விடுவதை விட.உனை பிரிந்தால் இறந்து, மீண்டும் பிறந்து வருவேனடி உன்னுடன் சேர்ந்து வாழ.

நீ நான் நாம் .

இது நமக்கான அழகிய உலகம் அங்கு நாம் சேர்ந்திருப்போம்.

என்னவளே சபு.

எழுத்தாளர் – யாரோ ஒருவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!