உலகம் முழுவதும் தீயின் மூலம் இருளை போக்கி கொண்டு இருந்தனர்.இவர் அதை மின்சாரத்தின் மூலம் போக்கலாம் என்று யோசித்தார். இதை உலகத்தில் உள்ள அணைத்து விஞ்ஞானிகளும் முடியாது என்று கூறினார்கள். அனால் எடிசன் முடியாது என்ற சொல்லை தனது அதிகாரத்தில் இருந்தே நீக்கி வைத்திருந்தார். இது அவருக்கு பெரும் சவாலாகவே இருந்தது. மின் சக்தியை தாங்ககூடிய கனிமங்களை தேடினர். இவர் 1500 சோதனைகள் செய்து பார்த்தார்.
அதன் மூலம் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 3000 கோட்பாடுகளை வகுத்தார். இதில் ஆச்சர்யம் என்றால் அதில் ஒரு கோட்பாட்டு தான் மின் விளக்கு எரிய கூடிய கோட்பாடு. விடாமுயற்சியுடன் உழைத்து மின் வவிளக்கை எரிய வைத்தார். இதன் மூலம் உலக விஞ்ஞானிகளின் கூற்றை பொய்யாக்கினர்.