திடீரென சத்தமாக ஒலி எழுந்தது.
கல்லூரியின் இடைவெளி மணி ஓசை.வகுப்பில் ஒரு சிலர் மட்டுமே இருந்தன.
அதில் அவனும் ஒருவன்.அவனிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்து அவனை நோக்கி நடந்தேன்.
ஆனால்,
என் கால்கள் குழந்தைகள் நடப்பது போல மெதுவாக அவனை நோக்கி சென்றது.
அவனின் கண்களை பார்த்த ஓர் நொடியில் உணர்ந்தேன் என் தவறை….
ஆம்.
ஆழ்கடலை விட ஆழமானது எதுவுமில்லை என நினைத்திருந்தேன் ஆனால் அவன் கண்களின் ஈர்ப்பே ஆழமானது என உணர்ந்தேன்.
அவன் கண்களை பார்த்த ஓர் கணத்தில் நான் மனப்பாடம் செய்த அனைத்தும் மறந்தன.
என் இதய துடிப்பின் ஓசை முதன் முதலாய் எனக்கு கேட்டது.
என் கண்கள் அவனை பார்க்க முடியாமல் கீழே பார்த்தது.என் கால்கள் நடுங்க ஆரம்பித்தது.
அந்த மணி துளி உணர்ந்தேன்…
இது காதலென்று ……என் காதலை சொல்லி விடலாமா என்று எண்ணிய நொடியில் ………….
என்ன கீர்த்தனா ? என சட்டென்று அவன் என்னை அழைக்க ……
“என் இரு விழிகளும் அவன் கருவிழிகளை காணும் அரை கணத்தில் திடீரென ஒலித்தது மணி ஓசை…..”
இம்முறை ஒலித்தது……
இடைவெளி முடிந்தது என உணர்த்தும் கல்லூரியின் மணி ஓசை அல்ல
இரவு முடிந்தது என உணர்த்தும் கடிகாரத்தின் மணி ஓசை…….
கனவில் கூட காதலை சொல்ல முடியவில்லையே ? என்ற சிறிய ஏமாற்றத்துடன் தொடங்கியது எனது நாள்.
என்னதான் love storyya ஒரு பையன் சொன்னாலும் அதைவிட பொண்ணுங்களோட point of view la love at first sight நல்லா இருக்கு இன்னும் நெறய feelingsah எழுதுங்க…..
இந்த மாதிரி விஷயம் எல்லாம் நடக்குதோ இல்லையோ படிக்க நல்லாயிருக்கு…..