சொல்ல முடியாத காதல்

சொல்ல முடியாத காதல்
எழுத்தாளர் – ஒரு பெண்
    இன்று கல்லூரியின் முதல் நாள் ஒரு வித பயத்துடனும் உற்சாகத்தின் உச்சியிலும் புது வித நபர்களின் மத்தியில் நான் அமர்ந்திருந்தேன். திடீரென சத்தமாக ஓசை ஒலித்தது……..ம்….ம்……. கல்லூரி தொடங்கியது என உணர்த்தும் மணி ஓசை……. திடீரென ஓர் ஆசிரியர் வாசல் வழியே உள் நுழைய யார் இவரென்று…… ஆச்சரிய கண்களுடனும், உள்ளே சிறு பயத்துடனும் எழுந்து நின்றோம். ஆசிரியர் அவரை பற்றி கூறிவிட்டு…… மாணவ மாணவியர் அவரவர் அறிமுகம் செய்ய தொடங்கினோம். என் முறை வந்ததும் எழுந்து என் பெயரை கூற தொடங்கும் வேளையில்……. திடீரென ஒரு ஓசை…… உள்ளே வரலாமா என்று ஒரு மாணவன் கேட்டதும்…… அனைவரின் கண்களும் அவனையே பார்த்தது.

அவன் உள்ளே நுழைந்து அவனது இடத்திற்கு செல்லும் வரை என் கண்கள் அவனை விட்டு அகல வில்லை.

அவனை பார்த்த ஒரு கணத்தில் என் மனதில் இனம் புரியாத

ஒரு வித மகிழ்ச்சி…….

ஒரு வித தவிப்பு…….

அதை வெளியே காட்டாமல் என்னை பற்றி அறிமுகம் செய்து விட்டு அமர்ந்து விட்டேன்.

அவனது அறிமுகத்திற்காக காத்திருந்தேன்….

அவன் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருந்த வேளையில்….

அவன் எழுந்தான்….

அவ்வளவு தான் என் கன்னத்தில் கையை வைத்து அவன் பக்கம் திரும்பி அழகாக அவனை பார்த்துகொண்டிருந்தேன்….

என் இமைகள் இமைக்க மறந்தன…..

என் உதட்டில் மட்டும் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

அவன் பெயர் அரவிந்த். அவன் பெயர் தெரிந்த நிமிடத்தில் ஆயிரம் முறை என்னகுள்ளேயே சொல்லி கொண்டு இருந்தேன்.

அரவிந்த்………

அரவிந்த்……….

அரவிந்த்………..

மாணவர்கள் அறிமுகம் செய்து முடித்ததும்.

பாடம் தொடங்கியது…….

என்னை சுற்றியிருப்பவரின் கண்கள் கரும்பலகையை  நோக்கி இருந்தாலும்

என் கருவிழிகள் மட்டும் அவனை பார்க்க துடித்தது……

என் மனமோ அவனை சுற்றி அலைபாய்ந்தது.

என் கூந்தலை சரி செய்வது போல திரும்பி அவன் முகம் பார்த்தேன்.

அவனிடம் பேச வேண்டும் என்னவெல்லாம் பேச வேண்டும் என மனபாடம் செய்தேன்.

திடீரென சத்தமாக ஒலி எழுந்தது.

கல்லூரியின் இடைவெளி மணி ஓசை.வகுப்பில் ஒரு சிலர் மட்டுமே இருந்தன.

அதில் அவனும் ஒருவன்.அவனிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்து அவனை நோக்கி நடந்தேன்.

ஆனால்,

என் கால்கள் குழந்தைகள் நடப்பது போல மெதுவாக அவனை நோக்கி சென்றது.

அவனின் கண்களை பார்த்த ஓர் நொடியில் உணர்ந்தேன் என் தவறை….

ஆம்.

ஆழ்கடலை விட ஆழமானது எதுவுமில்லை என நினைத்திருந்தேன் ஆனால் அவன் கண்களின் ஈர்ப்பே ஆழமானது என உணர்ந்தேன்.

அவன் கண்களை பார்த்த ஓர் கணத்தில் நான் மனப்பாடம் செய்த அனைத்தும் மறந்தன.

என் இதய துடிப்பின் ஓசை முதன் முதலாய் எனக்கு கேட்டது.

என் கண்கள் அவனை பார்க்க முடியாமல் கீழே பார்த்தது.என் கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

அந்த மணி துளி உணர்ந்தேன்…

இது காதலென்று ……என் காதலை சொல்லி விடலாமா என்று எண்ணிய நொடியில் ………….

என்ன கீர்த்தனா ? என சட்டென்று அவன் என்னை அழைக்க ……

“என் இரு விழிகளும் அவன் கருவிழிகளை காணும் அரை கணத்தில் திடீரென ஒலித்தது மணி ஓசை…..”

இம்முறை ஒலித்தது……

இடைவெளி முடிந்தது என உணர்த்தும் கல்லூரியின் மணி ஓசை அல்ல

இரவு முடிந்தது என உணர்த்தும் கடிகாரத்தின் மணி ஓசை…….

கனவில் கூட காதலை சொல்ல முடியவில்லையே ? என்ற சிறிய ஏமாற்றத்துடன் தொடங்கியது எனது நாள்.

23 Comments

  1. Usually on seeing girls, boys only do like this in stories ……but ur writing is quite opposite to that…i like soo much…my hearty wishes for ur writings…write many stories like this…all the best💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!