
நீங்கள் பேசுவதிலும் எழுதுவதிலும் திறமை பெற்று விளங்குவீர்கள். அதிகமாக கற்பனை திறமை பெற்றிருப்பீர்கள். காதலில் மிகுந்த மகிழ்ச்சி உடையவர். பொறாமை, பேராசை போன்ற பண்புகளை கொண்டிருப்பீர்கள். இந்த பண்புகள் எல்லை மீறும்போது நீங்கள் சில உறவுகளை இழக்க நேரிடலாம். நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதை பூரணமாக செய்து முடிப்பீர்கள்.
பிறரின் உள்ளுணர்வுகளையும் பிறரிடம் நன்கு பேசும் திறமையும் கொண்டிருப்பீர்கள். கூட்டத்தை பின்பற்றுகிறவராய் இல்லாமல் உங்களுக்கென்று புது வழியை உருவாக்கி அதில் செல்வீர்கள். புதுமையை படைக்கும் திறமை அதிகம் நிறைந்து காணப்படுவீர்கள். பிரச்சனையை தீர்க்க புதுமையாக சிந்தனை செய்வீர்கள் (Thinking Outside the box).
ஒரே செயலை திரும்ப திரும்ப செய்ய விரும்பாதவர். புதுமைகளை தேடி பயணிப்பவர். செய்யும் வேலையை திடீரென விட்டுவிட்டு முற்றிலும் சம்மந்தமே இல்லாத மற்றொரு வேலையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடியவர். உங்களின் வித்தியாசமான குணத்தை நன்கு புரிந்து கொள்ளும் உறவுகளை கண்டறிவதற்கு நீங்கள் சிரமப்படுவீர்கள். உங்களைப் போலவே ஆர்வமும் உங்களை கவரும் வகையில் உள்ள நபர்களையே வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்த விசயத்தை நீங்கள் செய்வதை யாராலும் தடுக்கவே முடியாது.
What your first letter of your name says about you – in Tamil
Views: 580 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...