P – What letter P says about you – in Tamil

    கில்லாடியாக செயல்படுபவர், உள்ளுணர்வுக்கு மதிப்பளிப்பவர், திறமைசாலி, திறந்தமனம் கொண்டவர் மற்றும் செல்வாக்குள்ளவராக விளங்குவார்கள். தங்களுக்கு சொந்தமானதை பிறருக்கு தர மறுப்பவர்கள் (Possessive). தாங்களாகவே ஒரு விசயத்தை இப்படிதான் நடந்திருக்கும் என தவறாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்.

    பிறரது கவலைகளை கேட்டு அவற்றை எண்ணி மிகவும் வருந்துபவர். அனைத்து விசயங்களிலும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என விரும்புபவர். தம்மை சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்க எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டத்தை அனுபவிக்க கூடியவர். நீங்கள் உங்கள் வாழ்வில் இலக்கை நோக்கிய பயணத்தில் சீரற்றவராகவும், சில நேரங்களில் சுயநலவாதியாகவும் நடந்துக்கொள்வீர்கள்.

    நீங்கள் பிறரை சரியாக புரிந்துக்கொள்ளும் விதம் உங்களை நண்பர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்க வைக்கும். மிகுந்த அறிவாளிகள். முதல் முறை பார்த்த உடனே மனதில் இடம் பிடிக்கும் அளவில் உங்கள் சந்திப்பு மற்றவர்களுடன் இருக்கும்.

    தன்னம்பிக்கை நிறைந்தவராக இருப்பீர்கள். உங்கள் திறமைகளை பிறர் பாராட்டவில்லை என அடிக்கடி உங்களுக்குள் வருத்தப்பட்டுக்கொள்வீர்கள். உங்களுடைய இலட்சியங்களை அடைவதையே நீங்கள் ஆசையாக கொண்டிருப்பீர்கள்.

    உங்களை யாராவது அசிங்கப்படுத்துவது போல உணர்ந்தால் உடனே அவர்களிடமிருந்து விலகியே இருப்பீர்கள். ஊரை சுற்றுவதற்கு மிகவும் ஆவல் கொண்டவர். இவர்கள் உறவுகளின் மிகபெரிய சந்தோசத்திற்கு உதாரணமாக இருப்பவர்கள். சில சமயங்களில் உடன் இருப்பவர்களையே விரோதியாக நினைப்பவரும் கூட. ஒரு சிறு சண்டை வந்தால் கூட இவர்களுடனான உறவானது உடனே முடிவுக்கு வந்துவிடும்.

What your first letter of your name says about you – in Tamil

Views: 512 00     உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!