மிகுந்த காதல் மற்றும் உணர்ச்சிவசம் மிக்கவர். நன்றாக பேசும் ஒரு நபர். நீங்கள் விரும்பும் நபருடன் அதிக நேரத்தை செலவிட மிகுந்த பேராசை கொண்டவர். உங்களுக்கான துணையை தேடி கண்டடைய அதிக கஷ்டப்படுவீர்கள். நீங்கள் செய்யும் துணிகரமான செயல்களே உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்.
அதிக ஆற்றலோடும் உற்சாகத்தோடும் காணப்படுபவர். இவர்களின் தேவைகளை தொடர்ந்து மாற்றிக்கொண்டு அவற்றை நோக்கியே செல்பவர். உடன் இருப்பவர்கள் அவர்களின் தேவைகளை அடைவதற்கு அவர்களை சரியான பாதையில் வழிநடத்துபவர். தீவிரமாக செயல்படுபவர்.
இவர்கள் மிக எளிதில் பணத்தை சம்பாதிப்பார்கள் எனினும் பொருளாதார ரீதியாக ஏதேனும் ஒரு நஷ்டம் உண்டாகி அந்த பணம் சென்றுவிடும். விரைவாக வேளை செய்பவர் அதனால் எப்போதும் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருப்பார்.
அனைத்து விசயங்களையும் தனி ஒருவராகவே கையாளும் திறமை உடையவர். அந்த செயலில் நிறைய வெறுப்புகள் ஏற்பட்டாலும் சலிக்காமல் முன்னேறிக்கொண்டே இருப்பவர். அன்பையும் தம்மை பற்றிய புகழ்ச்சியையும் பிறரிடம் எதிர்பார்ப்பவர்கள். சில சமயங்களில் உடன் இருப்பவர்களை காயப்படுத்தும் குணமுடையவர்.
எல்லாரும் செய்யும் Trending-ல் உள்ள செயல்களை இவர் செய்யாமல், தனக்கென ஒரு வழியை பின்தொடர்வார். நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பார். சில விசயங்களை தவறாக புரிந்துக்கொண்டு சண்டைபோடுபவர். அதிகம் பேசுபவர் அதனால் மற்றவர்கள் இவரிடம் சலிப்படைவார்கள்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 512 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...