உங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இயற்கையாகவே கூச்சப்படும் சுபாவம் கொண்டவர். உங்களால் செய்ய முடிந்த வேலை என்றாலும் அதனை நீங்கள் மற்றவர்களிடம் தெரிவிக்கமாட்டீர்கள் அந்த வேலையை தகுந்த நேரம் வரும்போது செய்து காட்டி உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். தன்னலம் கருதாமல் பிறருக்கு கொடுக்கும் மனப்பாங்கு கொண்டவர்.
ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக அதிகமாக யோசிப்பவர். மிக முக்கிய முடிவுகளை எடுக்கும்போது உணர்வு ரீதியாகவும் சிந்திக்க கூடியவர். இவர்கள் ஒரு வேலையை செய்வதற்கு முன்பே அந்த வேலையினால் வரும் பலனை எண்ணி மிகவும் சந்தோசப்படுபவர். ஆனால் வேலையை ஆரம்பித்தப்பிறகு அந்த வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் வருத்தப்படுபவர்.
இருதயத்தில் உள்ள உறவுகளையும் விசயங்களையும் எண்ணிப்பார்ப்பதில் சிறந்தவராக விளங்குபவர். சரியான துணையை அடைய நெடு நாட்கள் வரை காத்திருக்கும் குணமுடையவர். ஒவ்வொரு உறவிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். ஒரு உறவு ஏற்படும் துவக்க காலத்தில் 100 % அர்ப்பணிப்பை வழங்குபவர். இவர்களின் உறவில் உள்ள உணர்வுகளை கட்டுப்படுத்தும் அளவு சுய கட்டுப்பாடு உடையவர்.
எதவாது ஒரு வாக்கோ அல்லது சத்தியமோ செய்து கொடுத்தால் அதனை கட்டாயமாக நிறைவேற்றுபவர். விசுவாசமும் காதலும் நிறைந்து காணப்படுபவர். சிறந்த தலைமைத்துவ பண்புகளை உடையவர். கூட்டத்தில் இருந்தாலும் தனியாக தெரிபவர். தங்களுக்கான தேவைகளுக்கு மட்டுமே முதன்மை முக்கியத்துவம் கொடுப்பவர்கள். பல விடா முயற்சிகளை மேற்கொள்பவர். தங்கள் வாழ்கையில் பல எழுச்சிகளையும் தோல்விகளையும் காண்பவர்கள். தங்களுடைய கடந்த கால அனுபவங்களிலிருந்து பல விசயங்களை கற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துபவர்கள்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 509 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...