பெரிய மனதுடன் காதல் செய்வீர்கள். நீங்கள் காதலிக்கும்போது மிகுந்த நேர்மறையான சிந்தனைகளும் மிகுந்த ஆர்வமும் உங்களுக்குள் உண்டாகும். உங்கள் முதன்மை முக்கியத்துவத்தை உங்கள் வாழ்க்கை துணைக்கு மட்டுமே தருவீர்கள். சுதந்திரமாக இருப்பதையும் துணிகரமான செயல்களை செய்வதிலும் மிகுந்த ஆவல் கொண்டு இருப்பீர்கள்.
வெளிபுரத்தோற்றம் மிகவும் சிறப்பாக இருபதனால் எளிதில் மற்றவர்களை கவர்ந்து விடுவீர்கள். தங்களை அழகாய் காட்டிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயங்காதவர்கள். வாழ்கையில் உள்ள சவால்களை எதிர்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். அதிகமாக தாங்கள் விரும்பும் நபருக்கு பரிசளிக்கும் குணம் கொண்டவர்கள். புதுமையை அதிகமாக விரும்புபவர்கள்.
அதிர்ஷ்டசாலிகளாக விளங்குவீர்கள். உண்மையாக காதலிப்பவர்களாக விளங்குவார்கள். தனியாக இருப்பவர்களின் முதல் நோக்கமே ஒரு நல்ல துணையை தேடுவதாக தான் இருக்கும். எளிதில் உணர்வு ரீதியாக பாதிப்பிற்கு உள்ளாகுபவர்கள். இவர்கள் சிறந்த மேன்மையான வாழ்கையை வாழ ஆசைப்படுவார்கள் அதற்காக மிகவும் கடினமாக உழைப்பார்கள்.
இவர்களுக்கு எதை எப்படி எப்போது செய்ய வேண்டும் என்ற திறமை இயற்கையாகவே இருக்கும். சில சமயங்களில் தாங்கள் மிகவும் நேசித்த நபர்களையே தவிர்த்துவிடும் குணமுடையவர்கள். இவர்கள் அறிவாளிகளாகவும் ஒரு விசயத்தை நன்கு ஆராய்ந்து அறிந்துக்கொள்பவர்களாகவும் விளங்குவார்கள். வசீகரமான தோற்றம் உடையவர்கள்.
பிறரை எளிதில் புரிந்துக்கொள்ளும் திறமை கொண்டவர்கள். புது திட்டங்களையும் கொள்கைகளையும் உருவாக்கும் திறமை படைத்தவர்கள். இவர்கள் சுயநலன் மிகுந்தவர்களாகவும், அதிகமாக முயன்றே அனைத்து விசயங்களையும் பெருகிறவர்களாயும் விளங்குவார்கள்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 509 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...