V – What letter V says about you – in Tamil

    மிகவும் உண்மையும், நேர்மையும், நம்பகத்தன்மையும் மற்றும் விசுவாசமும் உடையவராக விளங்குவார்கள். ஒன்றாக கூடி வாழும் ஆசை கொண்டவர்கள். நடைமுறை வாழ்க்கையில் சுறு சுறுப்பாக வேலை செய்பவர்கள் மற்றும் ஆணித்தரமான நம்பிக்கையை உடையவர்கள். இவர்கள் நடைமுறை வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் இவர்களை பற்றி கணிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

     நல்ல நியாபக சக்தியை உடையவர்கள் எந்த ஒரு நிகழ்வையும் அப்படியே நினைவில் வைத்திருப்பவர்கள். உறவுகளில் பரந்த மனப்பான்மையை உடையவர்கள். வேலையை முடிக்க கடினமாக உழைப்பவர் மற்றும் வேலையின் இடையில் சிறு சிறு வீண்பேச்சுக்களில் ஈடுபடுபவர். பிறரை சார்ந்து இருப்பவர், வேலையில் தம்மை முழுவதும் அர்பணித்துக்கொள்பவர் மேலும் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குபவர்.

    நெருக்கமாக எளிதில் யாருடனும் பழகாதவர். பயத்தையும் ஆபத்தையும் எளிதாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்பவர்கள். தங்களின் கடின உழைப்பினால் எளிதில் வேலையை முடிக்கும் திறமை கொண்டவர்கள். நீடிய பொறுமையுடையவர்கள். பிறர் தம்முடன் நெருங்கி பழக வரும்போது அவர்களை எச்சரிக்கையுடன் கையாள்பவர்கள். காதல் உறவை ஏற்படுத்துவதில் மிகுந்த சிரமப்படுவீர்கள்.

    தாங்கள் ஒருவரிடம் நன்கு பழகி நெருங்கும் வரையில் அவர்களிடம் எந்த வாக்கையோ அல்லது சத்தியத்தையோ அளிக்கமாட்டார்கள். நல்ல மனம் கொண்டவர்கள் இனிமையான சொற்களை பயன்படுத்தும் நபர்களாக விளங்குவார்கள். மிகவும் வித்தியாசமான நபர்களால் மட்டுமே நீங்கள் கவரப்படுவீர்கள். உங்கள் இலக்கை நோக்கி எவ்வித குழப்பமும் இல்லாமல் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பீர்கள். உங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு மட்டுமே சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள்.

What your first letter of your name says about you – in Tamil

Views: 509 00     உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!