சுயநலமாக நடந்துக்கொள்பவர்கள் இருப்பினும் எந்த உறவையும் பிரிக்க நினைக்காதவர்கள். திருமணத்திற்கு முன்பு நன்கு பழகிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்யும் நோக்கில் காதலித்தவரை பிரிந்து செல்லும் நபரின் மேல் கடுமையான கோபம் கொள்பவர். நீங்கள் காதலில் உள்ள போது உங்கள் துணையை விட அதிகமாக அன்பு செலுத்தும் நபராக இருப்பீர்கள்.
உற்சாகமான விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவார்கள். தங்கள் இலட்சியத்தை அடையும் வரை ஒய்வு எடுக்கவே மாட்டார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் முடியாது என்ற வார்த்தையை மட்டும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். அடிக்கடி தம்மை சுற்றியுள்ளவர்களிடத்தில் தற்பெருமை பேசிக்கொள்பவர்கள். ஆர்வமுள்ள நபர்களுடன் இருக்க அதிகமாக விரும்புபவர்கள். கலை மற்றும் புதுமையை உருவாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பவர்கள்.
தங்கள் கருத்துக்களை கேட்பவர்களிடம் தனித்துவமாக விவரிக்கும் திறமை கொண்டவர்கள். ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபட்டு திறமையாக செய்து முடிக்கும் திறமை கொண்டவர்கள். தங்களை நம்பி வந்தவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்கள். தங்கள் வாழ்க்கை துணையைவிட இந்த உலகில் வேறு எதுவுமே முக்கியம் இல்லை என கருதுபவர்கள்.
நாடகத்திலும் திரைப்படங்களிலும் புத்தகங்களிலும் காட்டப்படும் காதல் வாழ்க்கையை தமது நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றுபவர்கள். அதிக உணர்ச்சி மிகுந்த நபர்களாக திகழ்வர். ஏதேனும் ஒரு உறவில் பிரச்சனைகள் ஏற்படும்போது அந்த சோகத்திலிருந்து வெளிவர அதிகமாக கஷ்டப்படுபவர்கள்.
ஒரு வேலையை குறுகிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நிலை வரும்போது ஓய்வில்லாமல் உழைக்கும் பழக்கம் கொண்டவர்கள். தங்களுடைய முடிவில் உறுதியாக இருப்பவர்கள். வசீகரமான தோற்றம் கொண்டவர்கள். தங்களுடைய சுய நலத்திற்காக எந்த அளவு வேண்டுமானாலும் Risk எடுப்பவர்கள். இதனால் இவர்களும் இவர்களை சுற்றியுள்ளவர்களும் சில சமயங்களில் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்வார்கள்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 509 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...