ஆர்வமுடைய நபர்கள். நீங்கள் விரும்புபவருடன் ஏதேனும் சண்டைகள் உண்டாகும்போது முதல் ஆளாக நீங்கள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். சுதந்திரமாக இருக்க அதிக ஆசைப்படுபவர்கள். செய்யும் தொழிலில் முன்னேற புது புது யோசனைகளைத் தேடுபவர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிக ஆசை கொண்டிருப்பவர்கள்.
உங்களிடம் ஏதேனும் ஒரு குறை இருப்பின் அதனை நீங்களே கண்டறிந்து கடினமாக உழைத்து அந்த குறையை நிறைவாக்குவீர்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்களை ஏதேனும் ஒரு விசயத்தை மாற்றிக்கொள்ள சொல்லும் விதம் அவர்களை கஷ்டப்படுத்தும் வகையில் இல்லாமல் நட்பு ரீதியாக இருக்கும். தங்களுடைய தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
பல நேரங்களில் தங்களை சுற்றியுள்ளவர்களிடம் தாங்கள் கட்டுப்பாடுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என முயற்சிப்பவர்கள். Risk எடுக்க தயங்காதவர்கள். பிறரின் கூச்ச சுபாவத்தை விட்டு வெளிவர உதவி செய்பவர்கள். பொறுமை அற்றவர் மேலும் பலர் முன்னேற ஒரு ஏணியாக விளங்குபவர்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடுமையாக எதிர்ப்பவர்கள். தனியாக தொழில் செய்வதில் அதிக ஆசை கொண்டவர்கள் மனிதர்களை நன்றாக கையாளக்கூடியவர்கள். அனைத்து வேலைகளிலும் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைப்பவர்கள்.
பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பார்கள். ஒரு முடிவை எடுப்பதற்கு முன் அனைவரின் கருத்துக்களையும் கேட்பவர்கள். காதலிப்பவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள மிகவும் கஷ்டப்படுபவர். காதல் விசயத்தில் அதிக சுதந்திரத்தை எதிர்பார்ப்பவர்கள். பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ள நபர்களையே திருமணம் செய்ய நினைப்பார்கள். தாங்கள் இருக்க வேண்டிய இடத்திலேயே இருந்துக்கொள்ள நினைப்பவர்கள்.
எல்லாருக்கும் பின்னாக நிற்க விரும்பாமல் எல்லோருக்கும் முன்னாள் ஒரு முன்னோடியாக நிற்க விரும்புபவர்கள். பல வழிகள் உள்ள ஒரு சூழ்நிலையில் எந்த வழியை தேர்வு செய்வது என்று முடிவெடுக்க திணறுபவர்கள். வாழ்க்கையில் பல சந்தோசங்களை இழந்து ஏங்குபவர்கள்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 509 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...