இவரு என்ன பாண்டிங்க விட அதிக கோப்பையை வென்றவரா? சச்சின விட அதிகம் ரன் அடிச்சவரா? விராட் கோலிய விட சிறந்த பேட்ஸ்மேன்னா? அப்புறம் ஏன் இவருக்கு இவ்ளோ ரசிகர்கள் மட்டும் இல்லாம சக கிரிக்கெட் ஜாம்பவான்கள் மத்தியில் ஏன் இவர போற்றி புகழனும். இந்திய அணியோட கட்டமைப்பயே மாத்துனது தோனி தான் அப்டின்னு ஐசிசி’யே ஏன் சொல்லனும்.
இருப்பதிலேயே அதிக பலம் பொருந்திய ஒருவன் ஜெய்க்குறதுல எந்த சுவாரசியமும் இல்ல ஆச்சரியமும் இல்ல எடுத்துகாட்டாக ஆஸ்திரேலியா உலகக்கோப்பைய வின் பண்ணுறது அந்த ரசிகர்களுக்கு பெரிய மிகைப்பட்ட விசியம் இல்லை. அதனை அளவுக்கு மீறி அனுபவித்து விட்டார்கள்.
ஆனால் இந்திய ரசிகர்களுக்கு 2011 உலககோப்பை வெற்றி எந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமா இருந்துச்சுனு யோசிச்சு பார்த்தாலே தெரியும் நமக்கு அது எவ்ளோ பெரிய விசியமா இருந்துச்சுனு.எல்லா பலமான அணியும் உலகக்கோப்பை வெற்றி பெற்றது இல்லை. யாரும் எதிர்பாராத நேரத்துல இளம் அணிய வச்சி 2007 டி’20 கோப்பையை வெற்றி பெற்றதும் , பலமும் பலவீனமும் பொருந்திய 2011 இந்திய அணியை உலக கோப்பைய வாங்க வழிநடத்தியதும் தோனியின் மிக சிறந்த தலைமை பண்பை வெளிபடுத்துகிறது .
அவர் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு உச்சபட்ச உயரத்தில் மக்கள் ஏற்றி வைத்ததை யாராலும் கொஞ்சம் கூட அசைக்க முடிய வில்லை. ஒரு தலை சிறந்த வீரர் ஒரு தனி நபர் சாதனைய உருவாக்கலாம் ஆனா அது கோப்பையை தேடி தராது அது தலைமையை பொருத்துதான் அமையும். அது தான் ஒரு பெருங்கூட்டம் தோனியை மற்ற வீரர்களை விடவும் ஒரு படி மேல வைத்திருகிறது. தினசரி விளையாட்டில் ஒரு வீரர் முக்கி முக்கி நன்றாக விளையாடினாலும் சரி மோசமாக விளையாடினாலும் சரி அன்றைய பேச்சு தோனிதான் அது பாராட்டுனாலும் சரி விமர்சனமானாலும் சரி. வெறுப்பவர்கள் அவரை என்னதான் விழுந்து புரண்டு வசைபாடினாலும் ஒன்றும் பண்ண முடிய வில்லை. காரணம் இங்க கிரிக்கெட் தெரிஞ்சவனுக்கும், ஏன் இப்ப கேப்டனா இருக்க கோலிக்கும் தெரியும் தோனியின் முக்கியத்துவம்.
தலைசிறந்த வீரர் நமக்கு எல்லா காலகட்டத்திலும் கிடைச்சிருக்காங்க. அப்ப சச்சின் இப்ப கோலி ஆனால் ஒரு தலைவன் உருவாக சதங்கள் மட்டும் போதாது. கங்குலி சச்சினை விட சிறந்த வீரர்னு சொல்லி விட முடியாது.ஆனால் கண்டிப்பாக சச்சினை விட நல்ல தலைவன் தோனி. என்றைக்குமே சிறந்த தலைவனும்.
ஒரு தோனி ரசிகனாக அவர் ஓய்வு நெருங்கிய தருணத்தில் நம்ம மனதில் ஓடுவது, அவர் இனி சாதிக்க பாக்கி ஒன்னும் இல்லை . இந்த தலைமுறை ரசிகர்களின் கனவை நிறைவேற்றிவிட்டார் இப்பொழுது இந்திய அணியையும் நல்ல கட்டமைப்புடன் கோலி கையில் ஒப்படைத்துவிட்டார். இனி அவர் விளையாடுவது இரண்டு மேட்சோக இருந்தாலும் எல்லாம் நமக்கு போனஸ் தான்.
“திட்டம் சரி இல்லையென்றால் திட்டத்தை மாற்றுங்கள் இலக்கை அல்ல.”
– தோனி