இன்னமும் உன் கூட வாழ ஆசைதானடி

இன்னமும் உன் கூட வாழ ஆசைதானடி
எழுத்தாளர் – ஸ்ரீ அகி

சாரதா:

உன்னுடனான

என் 50 ஆண்டுகால

வாழ்க்கையும்

உன் இறப்புடன்

எடுத்துச் சென்றாய்…

உன் நினைவுகள்

மட்டுமே மீதம் வைத்தாய்…

என்னவன் என்னுடன் என்ற

எண்ணமே என்னை

உயிர்பித்திருந்தது இத்தனை

நாட்களாக!!!!!

இனி எங்கே செல்ல

உயிர்ப்பிக்க என்னை

நான் பெற்றவையும்

அவை பெற்றவையும்

என் கண் முன்னே

ஆறுதல் கூறினாலும்

ஆறாத நெஞ்சம்

உன்னை மட்டுமே

தேடுதடா????

ஏற்பாடு செய்யப்பட்ட

திருமணத்தில்

எதார்த்தமாக இணைந்தோம்

ஏராளா இன்னல்களும்

ஏகாந்தமும் கண்டோம்!!!

பெரிதாக உன் அன்புமழை

எனை நனைக்கவில்லை!!!

அதற்காக நீ அமில

மழையும் பொழியவில்லை!!!

நீ விட்டு விலகிய

நொடிகள் எல்லாம்

எரிமலை மேடுகளாய்

ஆன போதிலும்

நெருங்கிய நிமிடங்கள்

எல்லாம் பனிமழையாய்

மாறிய அதிசியம் யாதோ!!!

முதல் குழந்தை

பிறந்த நொடி

நீ எனை கண்ட நொடி

உன் முழு காதல் உணர்ந்தேனடா!!

சிந்தவா சிதறவா என

கண்ணீர் துளிகள் உன்

கண்களில் காதல்

பேசிய நிமிடங்கள் அது!!!!

மறக்காத மாயநினைவுகளாய்

என் நெஞ்சில் இன்றும்!!!!

பிள்ளைகள் வளர வளர

எனை விட்டு நீயும்

உனை விட்டு நானும்

விலகிய தருணங்கள்

மன நெருடலே

என்றாலும் நம்

கடமை அதுவென

புரிய சிறிது காலம்

தேவைபட்டதடா!!!!

வீட்டில் நுழைந்ததும்

உன் வாய் மொழிவது

என் பெயரே

உன் சிறு தேவை

முதல் பெறுதேவை வரை

என் தேவைகளாய்

மாறிபோனதடா!!!

நம் வனப்பு குறைந்து

வயது நிறைந்தது

நம் பேத்தி பேரனின்

வரவில் உணர்ந்தேனடா!!!

அவர்களை உன் தோலில்

சுமந்து நீ கூறும்

கதைகள் அனைத்தும்

எனக்கு நம் வாழ்க்கையை

புரட்டி போட்ட நேரங்கள்

ஆகும்!!!!!

அப்போது விட இப்போது தான்

உனை அதீத வெட்கத்துடன்

காண்கிறேன்!!!

நறைத்த முடியும்

தளர்ந்த நடையும்

குழறிய பேச்சும்

கர்வமற்ற காதலும்

கட்டுப்பாடில்லா வாழ்க்கையும்

அளவற்ற அக்கறையும்

என்னை மேலும் மேலும்

உன்னுள் ஈர்கிறதடா!!!!

எனுக்கு நீ

உனக்கு நான்

என்ற வாழ்க்கை மீண்டும்

வந்த சில வருடங்களில்

எனை தனியே விட்டு

செல்வது நியாயமா??

பேச்சற்ற உன் சடலம்

நீ பேசிதீர்த்த அனைத்து

வார்த்தைகளையும்

கொட்டி தீர்க்கிறது!!!

காற்றில் ஆடா

உன் முடி நம்

கார்கால கனவுகளை

களவாடுகிறது!!!

இன்றும் என்

முந்தானை கொண்டே

உன் முகம் துடைக்கிறேன்

அந்த நமட்டுச்

சிரிப்பை மட்டும் ஒரே

ஒரு முறை

சிரித்துவிடு!!!!!!

எனை விட்டு

உனை தூரம் தூக்கி

செல்கின்றன

உயிரற்ற உடலாய்

நானும் இங்கே!!!!

மஞ்சள் குங்குமம்

இல்லா என் முகத்தை

பாக்க சகிக்காமல்

உன் கோவம்

கொப்பளிக்கும்

உதடுகளுடன்

“அடியே சாரதா அந்த குங்குமத்த கொஞ்சம் தெரியரமாறிவைடி”

என கடிந்துறைக்க

மாட்டாயா???

தள்ளாடும் எனை

கண்டு கிளவி என

நகையாடும் உன்

சொற்கள் ஒரு புறம்

இருப்பினும் தாங்கி

பிடிக்கும் உன்

தோல்கள் இன்று

எனை பிடிக்காதா!!!!!

என் விழி வழி பொழியும்

மொழி அறியும்

நாயகனே இனி

யார் அறிவார்

இந்த கிழவியின்

வாய்மொழி கூட??

இந்த 50வருட

கால வாழ்க்கையும்

என்னுடன் துணை

நின்று வாழ்ந்தவனே

இன்பத்தை பங்கு

போட்ட எனக்கு

இறப்பை பங்கு போட்டு

கொடுக்காதது ஏனோ????

மாமா என்னையும்

கூட்டிச் செல்

உன்னுடனே!!!

அன்று போல் இன்றும்

உன்னுடன் அமைதியாக

வருகிறேன்!!

குனிந்த தலை நிமிராமல்!!

“அன்பு மாமா நானும் வருகிறேன்!!!

சீனி அத்தான் நானும் வருகிறேன்!!”

என்னை விட்டு மட்டும்

செல்லாதீர்கள்!!

சாரதா: கண்ணீர் மல்க

இறந்த கணவனின் சடலம் எடுத்துச் செல்லும் பாதையை நோக்கி மெளனமே உருவாய் மாறி போய் மனக்குமறளுடன் நிற்கிறாள்!!

சீனிவாசன்: உடைந்து உருகி

துவண்டு கிடக்கும் மனைவின் மடி அருகே (ஆத்மா) எனக்கும் ஆசைதானடி உன்னுடன் இருக்கவே என்று கண்ணீர் வடியா கண்களுடன் கதறி தவிக்கிறார்..

எழுத்தாளர் – ஸ்ரீ அகி

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!