மலை மேகங்கள் தவழும் அந்த அழகிய நாடு பழமையின் சிகரமென விளங்கியது. அந்த நாட்டின் அரசனோ மிகவும் வல்லமை கொண்டவன். பொன்னும் பொருளும் செழிப்பாய் இருக்கும் மதுரா எனும் நாடாகும். அந்த நாட்டின் அரசன் மதுரா வர்மன் ஆவான்.
இவன் எளியோருக்கு உதவுவான். படைகளத்தில் எதிரிகளை வீழ்த்துவான். இதற்கெல்லாம் காரணம் இவன் வலிமை தான் என்று அந்நாட்டு மக்கள் எண்ணினர். ஆனால் மதுரா வர்மனோ பெரும் தெய்வ பக்தி கொண்டவன். இறைவன் அருள் புரிவதால் தான் தனக்கு இத்தனை பலமும் கிடைத்தது என எண்ணினான். ஒவ்வொரு நாளும் இறைவனை வேண்டி பூஜை செய்து கொண்டே இருப்பான். தன் பலத்தின் மேல் நம்பிக்கை இருந்தாலும் இறைவனே அதற்கு காரணம் என உறுதியாக இருந்தான். ஒரு நாள் இறைவனின் தரிசனம் பெற கோவிலுக்கு சென்றான். அங்கே இருந்த ஒரு முனிவர் மதுரா வர்மனை சந்தித்தார். அவரிடம் ஆசி பெற்ற மன்னன் தன் ஆட்சியின் பெருமைகளை அவரிடம் கூறினான்.
தங்களுக்கு என்ன உதவி வேண்டுமாலும் செய்கிறேன் என் நாட்டிலேயே தங்கி விடுங்கள் என்று கூறினான். அதற்கு முனிவர் சிரித்தபடியே உன் ஆட்சியே அழிய போகிறது. நீ எப்படி எனக்கு உதவி செய்வாய் என்று கேட்டார். மன்னன் எனக்கு என்ன ஆக போகிறது. என்னுடன் தான் இறைவன் இருக்கிறாரே. இறைவன் அருள் இருக்கும் வரை என்னையும் என் ஆட்சியையும் எவராலும் ஒன்றும் செய்து விட முடியாது என கூறினான்.
அதற்கு முனிவர் இல்லை நிச்சயம் உன் ஆட்சி அழியும் இதுவும் இறைவன் செயல் தான் என்று அங்கிருந்து செல்ல முற்பட்டார். மதுரா வர்மன் யோசித்தப்படி சற்று பொறுங்கள் இவ்வாறு நடக்காமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். உனக்கு இறைவன் நம்பிக்கை இருக்கிறது அல்லவா அதனால் யார் உதவியும் இல்லாமல் தனியாக சென்று அந்த இறைவனை வேண்டி மதுரா நதியில் இறங்கி பூஜை செய் உனக்கு அருள் புரிவார். அவரிடம் தீர்வை பெற்றுக் கொள் என்று கூறினார். உடனே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கட்டளையிட்டான்.
மன்னனின் உடன் இருந்தவர்கள் அந்த ஆறு நம் நாட்டை சுற்றியும் உள்ளது நம் நாட்டின் பாதுகாப்பிற்காக இயற்கையாகவே நிறைய இடையூறுகளை பெற்றுள்ளது அதனால் அதில் இறங்கி தாங்கள் பூஜை செய்வது ஆபத்து என கூறினார்கள். ஆனால் அரசனோ அதை ஏற்கவில்லை. எதுவாக இருந்தாலும் இறைவன் பார்த்துக் கொள்வார் என்று கூறி விட்டு புறப்பட்டான். முனிவர் கூறியதைப் போலவே மதுரா நதியில் இறங்கி இறைவனை வேண்டி பூஜையை ஆரம்பித்தான் மதுரா வர்மன். அடர்ந்த காடாய் இருப்பதால் அங்கு காட்டு மிருகங்களை தவிர வேற எதுவும் இல்லை. இரண்டு நாட்கள் பூஜை செய்த படியே இருந்தான். திடீரென ஒரு சுழல் அவனை சூழ்ந்து கொண்டது முழ்கும் நிலையில் தண்ணீரில் தத்தளித்தாள்.
அப்போது அங்கே சிங்கம் ஒன்று வந்தது தண்ணீரில் மன்னன் இருப்பதைக் கண்டு அவனை காப்பாற்ற முற்பட்டது. மன்னன் தன் உயிருக்கு அந்த சிங்கத்தால் ஆபத்து முனிவர் சொன்ன மாதிரியே நடந்து விடும் என பயந்தான். சிங்கம் நீண்ட நேரம் முயற்சி செய்து விட்டு சென்றது சுழற்சியின் வேகம் அதிகமாகி கொண்டே போனது மன்னன் இறைவனை வேண்டிக் கொண்டே இருந்தான். அங்கே எதிரி நாட்டு மன்னனின் தளபதி அங்கே வந்தான் எதிரி நாட்டு மன்னனாக இருந்தாலும் ஆபத்தில் இருக்கும் போது காப்பாற்ற வேண்டும் என எண்ணி ஒரு பரிசை ஆற்றுக்குள் அனுப்பினான். ஆனால் அதை உணராத மதுரா வர்மன் தான் பலவீனமாக இருக்கும் போது தன்னை அழிக்க திட்டம் தீட்டுகிறார்கள் என்று பரிசிலில் ஏற மறுத்தான்.
என்ன நேர்ந்தாலும் இறைவன் காப்பாறிவிடுவார் என எண்ணிக் கொண்டு பிராத்தனை செய்த படியே தண்ணீரில் தத்தளித்தான். நேரம் ஆக ஆக சுழற்சி அதிகமானது. சுழற்சியில் முழ்கிப் போனான் மதுராவர்மன்.
இறந்து இறைவனடி சேர்ந்த மன்னன் இறைவனிடம் ஏன் என்னை காப்பாற்ற வரவில்லை. இதனால் என் ஆட்சி அழிந்து விட்டதே நான் தங்களை வணங்கிக் கொண்டு தானே இருந்தேன். ஏன் என்னை காப்பாற்ற வில்லை என்று கேட்டான், அதற்கு இறைவன் ஏன் காப்பாற்றவில்லை இரண்டு முறை நீ தப்பிக்க வாப்ப்பை கொடுத்தேன் ஆனால் நீ தான் அதை ஏற்கவில்லை.
இவன் எளியோருக்கு உதவுவான். படைகளத்தில் எதிரிகளை வீழ்த்துவான். இதற்கெல்லாம் காரணம் இவன் வலிமை தான் என்று அந்நாட்டு மக்கள் எண்ணினர். ஆனால் மதுரா வர்மனோ பெரும் தெய்வ பக்தி கொண்டவன். இறைவன் அருள் புரிவதால் தான் தனக்கு இத்தனை பலமும் கிடைத்தது என எண்ணினான். ஒவ்வொரு நாளும் இறைவனை வேண்டி பூஜை செய்து கொண்டே இருப்பான். தன் பலத்தின் மேல் நம்பிக்கை இருந்தாலும் இறைவனே அதற்கு காரணம் என உறுதியாக இருந்தான். ஒரு நாள் இறைவனின் தரிசனம் பெற கோவிலுக்கு சென்றான். அங்கே இருந்த ஒரு முனிவர் மதுரா வர்மனை சந்தித்தார். அவரிடம் ஆசி பெற்ற மன்னன் தன் ஆட்சியின் பெருமைகளை அவரிடம் கூறினான்.
அந்த சிங்கத்தையும் மனிதரையும் நான் தான் அனுப்பினேன். நீ அவர்களை உதாசினம் செய்துவிட்டாய். இப்போது இறந்தும்விட்டாய் இதிலிருந்து நீ உணர்ந்து கொள். நம்பிக்கை முக்கியம் ஆனால் மற்றவரை நம்புவதில் ஒரு அளவு வேண்டும். எல்லா நேரங்களிலும் எல்லாறும் தன்னுடன் இருப்பார்கள் என்று எண்ணுவது தவறு. முதலில் நீ உன்னை நம்ப வேண்டும் உன் வெற்றிக்கும் தோல்விக்கும் நீயே காரணம். உன் முயற்சியே காரணம் என்று நம்ப வேண்டும். அது போல் வாய்ப்புகள் நம்மை தேடி வரும் போதே அதை உபயோகிக்க வேண்டும் தவறினால் அந்த வாய்ப்புள் மறுபடியும் கிடைக்காது.
இரண்டில் ஒரு வாய்ப்பை நீ உபயோகித்திருந்தால் இன்று நீ உயிரோடு இருந்திருப்பாய். என்று கூறினார்.
மன்னன் தன் தவரை உணர்ந்தான்.
உணர்ந்தும் என்ன பயன். வாய்ப்புகள் நம் வாழ்வின் அங்கம். நம்பிக்கை நமாகவே உருவாக்கிக் கொள்ளும் ஒரு அங்கம்..