தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

      கண்ணன் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர். அவரது நிறுவனத்தில் ஏற்பட்ட சில தவறுகளால் 45 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் மிகவும் மன வேதனை அடைந்து இருந்தார். அவர் ஒரு பூங்காவிற்கு சென்று மிகவும் சோர்ந்து போய் ஓரிடத்தில் அமர்ந்து இருந்தார்.

      அப்பொழுது அவரின் அருகில் முதியவர் வந்து அமர்ந்தார். முதியவர் அவனை பார்த்து விட்டு ஏன் சோகமாக இருகிறாய் என்று கேட்டார். அவன் நடந்ததை அவரிடம் கூறினான்.உடனே அவர்  உனக்கு  45 லட்சம் இருந்தால் உனது பிரச்சனை தீர்ந்து விடும் அல்லவா என்றார்…. ஆம் என்றான்……

      அவர் அவனுக்கு ஒரு செக் கொடுத்தார் .அதில் 1 கோடி என்று எழுதப்பட்டிருந்தது.  அவர் இதை வைத்து உனது நிறுவனத்தை நல்ல படியாக நடத்து என்றார்.

       ஆனால், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் வந்து இந்த தொகையை எனக்கு திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்றார். அவரும் சரி என்று உற்சாகமாக எழுந்து தனது நிறுவனத்திற்கு சென்றார்.

      கண்ணன் அவரது அலுவலகத்திற்கு சென்று அந்த செக்கை அவரது அலமாரியில் வைத்து  பூட்டினார். உடனே தனது உதவியாளரை அழைத்து அனைத்து ஊழியர்களையும் நிர்வாக  கூடத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

     கண்ணன்  பேச  ஆரம்பித்தார் . ” நண்பர்களே, நமது  நிறுவனத்தில் 45 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. என்னிடம் இப்பொழுது 1 கோடி உள்ளது ஆனால் அதை நான் தொட மாட்டேன். நாம் அனைவரும் எதனால் இந்த நஷ்டம் வந்தது ?

      என்று ஆராய்ந்து அதை களைந்து  நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார் .

    பின்னர் வேலைகள் வேகமாக நடந்தன.எதனால் ஏற்பட்டது என்று தீர ஆராய்ந்தனர். விரைவில் தவறு கண்டு பிடிக்கப்பட்டது. அதை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து தவறுகள் சரி செய்யப்பட்டன.

      இதனால் சரியாக ஒரு வருடம் கழிந்தது. அப்பொழுது அந்த நிறுவனத்தின் லாபம் அதிகரித்து இருந்தது. அந்த பெரியவர் சொன்னது போல் கண்ணன் அதே நாளில் அதே இடத்திற்கு சென்று அவரை தேடினார். ஆனால் அவரை காணவில்லை. அருகில் இருப்பவர்களிடம் கேட்டான். அவர்கள் அவர் மன நலம் சரி இல்லாதவர் என்றும் அவர் இங்கு வருபவர்களுக்கு செக் எழுதி கொடுத்துக் கொண்டே இருப்பார் என்றனர்.

      அந்த நிமிடத்தில் கண்ணனுக்கு பேச முடியவில்லை. அவர் தன்னம்பிக்கையை கண்ணனுக்குள் விதைத்து சென்று விட்டார்.

      நம்மால் எதையும் செய்ய முடியும் என்று முதலில்  நாம் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை நாம் நினைத்ததை விட மிக சிறப்பான இடத்தில் நம்மை கொண்டு சேர்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!