இதனால் சரியாக ஒரு வருடம் கழிந்தது. அப்பொழுது அந்த நிறுவனத்தின் லாபம் அதிகரித்து இருந்தது. அந்த பெரியவர் சொன்னது போல் கண்ணன் அதே நாளில் அதே இடத்திற்கு சென்று அவரை தேடினார். ஆனால் அவரை காணவில்லை. அருகில் இருப்பவர்களிடம் கேட்டான். அவர்கள் அவர் மன நலம் சரி இல்லாதவர் என்றும் அவர் இங்கு வருபவர்களுக்கு செக் எழுதி கொடுத்துக் கொண்டே இருப்பார் என்றனர்.
அந்த நிமிடத்தில் கண்ணனுக்கு பேச முடியவில்லை. அவர் தன்னம்பிக்கையை கண்ணனுக்குள் விதைத்து சென்று விட்டார்.
நம்மால் எதையும் செய்ய முடியும் என்று முதலில் நாம் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை நாம் நினைத்ததை விட மிக சிறப்பான இடத்தில் நம்மை கொண்டு சேர்க்கும்.