Health Tamil Articles மனிதனின் மீது உடலின் பயம் By StreamZ November 30, 2019August 12, 2022 Views: 472 00 காலை எழுந்த உடன் உரிய நேரத்தில் காலை உணவு சாப்பிடாத போது இரைப்பை பயப்படுகிறது.ஒரு நாள் அதாவது 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீருக்கு குறைவாக குடிக்கும் போது சிறுநீரகம் பயப்படுகிறது.தினமும் இரவு 11 மணி வரை தூங்காமல் கண் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது தூங்கிகொண்டு இருக்கும் போது பித்தப் பை பயப்படுகிறது.சூடு ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் உண்ணும் போது சிறுகுடல் பயப்படுகிறது.நிறைய வறுத்த மற்றும் காரமான உணவுகளைச் உண்ணும் போது பெருங்குடல் பயப்படுகிறது.சிகரெட் மற்றும் பீடி போன்றவற்றையும் , அழுக்கு மற்றும் மாசடைந்த காற்றை நீங்கள் சுவாசிக்கும்போது நுரையீரல்கள் பயப்படுகின்றன.அதிகப்படியான எண்ணெயில் வறுத்த உணவுகள் , ஜங்க், துரித(Fast food) உணவுகளை உண்ணும் போது கல்லீரல் பயப்படுகிறது.அதிக உப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் உள்ள உணவைச் உண்ணும் போது இதயம் பயப்படுகிறது.சாப்பிடச் சுவையாக இருக்கிறது என்பதற்காக அதிக இனிப்புப் பண்டங்களை வெளுத்து வாங்கும்போது கணையம் பயப்படுகிறது.இரவில் அதிகம் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தில் வேலை செய்யும்போது கண்கள் பயப்படுகின்றன.