எல்லோரின் எதிர்கால வாக்குறுதிகளை மறுக்கிறேன். அடுத்த நிமிடம் நிலையில்லாத வாழ்வில் என்னை மட்டுமே நிலையாய் நம்பி, எதிர்பார்ப்புகளை குறைக்கிறேன். நான் எல்லோரிடமும் அன்பு செலுத்தவே விழைகிறேன், அவர்களிடம் பூரனமாய் என்னை அளிக்கிறேன், என் வாழ்வை ஒப்படைத்து தூரம் நின்று வேடிக்கை பார்க்க விரும்புகிறேன். ஆனால் விட்டு பிரிதல் என்பது இன்றியமையாத ஒன்றாகும் போது அதை ஏற்கப்பட வேண்டியதாயிற்று.