அந்த ஆறுதலை தரும் ஒருவர் நம்மை மீண்டும் அதே மாதிரியான ஆறுதலை தேட வைத்துவிட்டால் அதுவே பெரிய வலியின் தொடக்கமாக இருக்கும். உங்களுக்கான துணை வேண்டும் பொழுது உங்களையே துணையாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் நினைவுகளை நீங்களே பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் துக்கங்களை உங்களுடனேயே பரிமாறி அதற்கான வலியை தீர்த்துக் கொள்ளுங்கள். தனியே இருந்து சோகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான ஆறுதலையும், சந்தோசங்களையும் உங்களை தவிர வேறு எவராலும் தர இயலாது.