எதை யாரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்

எதை யாரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்
     தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலில் வெற்றி பெற பல திறமைகள் தேவைப்படுகின்றன அந்த திறன்களை அவர்கள் அனுபவம் மூலமாகவும் பயிற்சி மூலமாகவும் சில புத்தகங்கள் மூலமாகவும்  பெறுகின்றனர். தங்கள் துறைகளில் சிறந்து விளங்குகின்ற பிற தொழில் வல்லுநர்களிடம் இருந்து நிறைய திறன்களை கற்றுக் கொள்ள லாம்.

சவாலை கையாளுதல்:

       தொழில் முனைவோருக்கு தேவைப்படும் மிக முக்கிய திறமைகளில் ஒன்று ரிஸ்க் எடுப்பது மேலும் தொழில் முனைவோர்கள் கணக்கிடும் ரிஸ்க் எடுக்க வேண்டும் எனவே இதை அறுவை சிகிச்சை செய்யும்  நிபுணரிடம் இருந்து கற்றுக் கொள்ள லாம். அறுவை சிகிச்சை நிபுணர் எடுக்கும் ரிஸ்க் ஒரு மனிதனின் உயிரை காப்பாற்றலாம் அல்லது உயிரை  பறிக்கலாம். 

           அவ்வாறு ரிஸ்க் எடுத்து அறுவை சிகிச்சை செய்யும் போது அவர்களின் செயல்திறன் எந்த விதத்திலும் பாதிப்படையாமல் இருக்கும் மேலும் அவர்கள் நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டி தைரியத்தை அதிகரிப்பார்கள்.  எனவே தொழில் முனைவோர் களும் இத்தகைய ரிஸ்க் எடுக்கும்  பண்பினை இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

விடாமுயற்சி:

         தொழில் முனைவோர்களின் பயணம் வெற்றி மற்றும் தோல்வி இந்த இரண்டும் சார்ந்து அமையும். தொழில் முனைவோர்கள் தோல்வியை கண்டு பயந்து முயற்சியை விட்டுவிடக்கூடாது. ஏனெனில் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைவர்களான மார்க் ஜூகர்பெர்க், jack ma, பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களும் நிறைய தோல்விகளை கண்டு வந்தவர்களே.எனவே தொழில் முனைவோர்கள் தோல்வியை கண்டு பயம் கொள்ளல் ஆகாது. தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டியவை உறுதி விடாமுயற்சி பிடிவாதம் எனும் பண்பு நலன் மற்றும் திறமைகள். 

      விடாமுயற்சியை விளையாட்டு வீரர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். அவர்கள் அவர்கள் தோல்வியை கண்டு பயம் கொள்ளாமல்  தனது தவறுகளை கண்டறிந்து அவற்றை திருத்திக்   கொண்டு விடாமுயற்சியுடன் முன்னேறுகின்றன.

பேச்சு  திறமை:

          தொழில் முனைவோருக்கு தேவையான மற்றுமொரு முக்கியமான பண்பு நலன் பேச்சி திறமையாகும் இதனை தொழில் முனைவோர்கள், வக்கீல் களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். 

      ஊழியர்களுடன், வாடிக்கையாளர்களுடன், விற்பனையாளர்களுடன், நிபுணர்களுடன், முதலீட்டாளர்களுடன், மேலாளர்களுடன்  பல விசயங்களை அவர்களை செய்ய வைக்கும் நோக்குடன் கூடிக் கலந்து பேச நேரிடும்.   இதேபோன்று ஒப்பந்தங்களை பல வல்லுனர்களை இணங்க வைக்க நேரிடும் எனவே இவற்றை வக்கீல் களிடமிருந்து பேச்சு திறன் மற்றும் இணங்க வைத்தல் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்தல்:

       தொழில் முனைவோருக்கு ஏற்படும் மிகப்பெரிய சவால் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடித்தல் ஆகும்.

       பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடித்தல் இந்த திறனை பெரும்பாலும் கேம் விளையாடும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். 

          கேம் விளையாடுபவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் வல்லவர்களாக இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.

         பெரும்பாலும் கேம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட தீர்வுகளை கொண்டு விளையாடப்படுகிறது. கேம் விளையாட படும்போது ஏற்படும் பிரச்சினைகளை தனிப்பட்ட முறையில் தீர்வு கண்டு அடுத்த நிலைக்கு முன்னேற தூண்டுகிறது. எனவே பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பற்றி கேம் விளையாடும் அவர்களிடமிருந்து தொழில்முனைவோர்கள் எளிதில் கற்றுக் கொள்ளலாம்.

விளக்கவுரை:

       தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய முக்கியமான  பண்பு நலன் விளக்குதல். தொழில்முனைவோர் நிறைய இடங்களில் விளக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .

 

       வாடிக்கையாளர்களிடம், விற்பனையாளர்களிடம், முதலீட்டாளர்களிடம், ஊழியர்களிடம்,   நிறுவனத்தைப் பற்றி அல்லது அவர்களின் பொருள்கள் மற்றும் சேவைகள் பற்றி விளக்க வேண்டி வரும்.  அவ்வாறு விளக்கும்போது தெளிவாகவும், அவர்களுக்கு புரியும் படியும், அவர்களின் கவனத்தை சிதறவிடாமலும், மனநிலையை அறிந்து, உதராணத்துடன், சாதரான வார்த்தை மொழிகளுடன் விளக்க வேண்டும். அவர் விலக்கப்பட்ட உடன் அவர்களின் கேள்விகளுக்கு பணிவாக பதில் கூற வேண்டும். இந்த    பண்பு நலனை ஆசிரியர்களிடமிருந்து எளிதில் கற்றுக்கொள்ளலாம். ஏனெனில் ஆசிரியர்கள் பல மனநிலையில் உள்ள மாணவர்களின் கவனத்தை ஒன்று திரட்டி எளிதில் விளக்கம் அளிப்பார். எனவே விளக்கும் முறையை ஆசிரியர்களிடமிருந்து  தொழில்முனைவோர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!