Views:
705
தமிழர்கள் உணவு உண்ணும் முறையை வைத்து அவற்றிற்கு பெயர்கள் வைத்துள்ளனர். அவை 12 வகையாக உள்ளனர்.
- அருந்துதல் – மிகச் சிறிய அளவே உட்கொள்ளல். உண்ணும் அளவை வைத்து இது வகைப்படுத்தப் பட்டுள்ளது. எ.கா : புட்டு, உளுந்தங்கஞ்சி
- உண்ணல் – பசிதீர உட்கொள்ளல். வயிறு நிறையும் அளவு உண்ணுதல் உன்னல் எனப்படும். எ.கா :நீங்க பசிக்கு போது சந்தோசமா எதை சாப்பிட்டாலும் அது உன்னல்.
- உறிஞ்சல் – வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல். நீரால் செய்யப்பட்ட பொருளை மட்டும் உட்கொள்வது. எ.கா : சூப், பழசாறு
- குடித்தல் – நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல். எ.கா : பழைய சோறு, கூழ் வகைகள்
- தின்றல் – தின்பண்டங்களை உட்கொள்ளல். இது பொதுவாக நொறுக்கு தீனிகளை அடிப்படையாகக் கொண்டு உட்கொள்வது தின்றல். எ.கா : முறுக்கு, கடலை மிட்டாய் .
- துய்த்தல் – சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல். உங்களுக்கு மட்டுமே பிடித்த உணவை உட்கொள்வது. அன்றைய காலம் முதல் இன்றைய கால கட்டம் வரை பெரும்பாலான தமிழர்களுக்கு பிடித்த உணவு . எ.கா : வாழை இலையுடன் கூடிய வடை ,பாயசம்.
- நக்கல் – நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்.நாக்கை மட்டும் பயன்படுத்தி உட்கொள்வது நக்கல் ஆகும். எ.கா : பஞ்சாமிர்தம், ஐஸ் க்ரீம்
- நுங்கல் – முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல். அந்த உணவு முழுவதையும் ஒரே முறையில் உட்கொள்வது நுங்கல். எ.கா : ஆஃப்பாயில் [HALF BOIL EGG], லட்டு
- பருகல் – நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.நீர் ,பால் பொருட்கள் குடிப்பது பருகல். எ.கா : டீ, மோர், பழசாறு
- மாந்தல் – பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல். இந்த வகையான உணவு பொருட்களை பார்த்தாலே உடனே அதை காலி செய்யும் உணவுகள் இதில் அடங்கும். இன்றைய தலைமுறையின் மாந்தல் உணவு . எ.கா : பிரியாணி
- மெல்லல் – கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல். கடிக்க கடினமாக உள்ள உணவு பண்டங்கள் அனைத்தும் இதில் அடங்கும். எ.கா : கரும்பு, எலும்பு
- விழுங்கல் – பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல். பல்லிலும் நாக்கிலும் படாமல் நேரடியாக முழுங்குவது விழுங்கல் ஆகும். எ.கா : மாத்திரை